காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

Hospital iftarநமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவரும் வருடாந்த இப்தார் நிகழ்வு இவ்வருடமும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்எம்.ஜாபிர் அவர்களின் தலைமையில் இன்று 2015.07.14 ம் திகதி வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டதுடன் வைத்திய நிபுநர்கள், ஏனைய வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள் , வங்கி முகாமையாளர்கள், வங்கி உத்தியோகத்தர்கள், கல்வி நிலைய பணிப்பாளர்கள், மற்றும் அரச தனியார் துறையில் கடமைபுரியும் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக உதவி புரிந்துவரும் நன்கொடையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டனர்.
Hospital iftar

இப்தார் விஷேட மார்க்கச் சொற்பொழிவினை பிஸ்மி குர்ஆன் பாடசாலையின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரி.எம்.ஷப்ரி நளீமி அவர்கள் நிகழத்தியதுடன் துஆ பிரார்த்தனையினை சேவைக்கால ஆசிரிய ஆலோசகரும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினருமான மௌலவி எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்கள் மேற்கொண்டார்.

Iftar hospitalIftar hospital

மேற்படி இப்தார் நிகழ்வுக்கு ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தினர் அனுசரனை வழங்கினர்.

Published by

Leave a comment