விபத்தில் காயமடைந்த காத்தான்குடி தாயார் காலமானார்

janaza– MJ

காத்தான்குடி: கடந்த வாரம் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு காலைநேரம் நோன்புடன் சிகிச்சைக்காகச் சென்றிருந்தவேளை, ஆரையம்பதி பிரதானவீதி மஞ்சள் வீதிக் கடவையைக் கடக்க முற்பட்டவேளையில் விபத்துக்குள்ளாகி, மட்டக்களப்பு அரசாங்க வைத்தியசாலையில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த பாத்திமா எனும் 64 வயதையுடைய தாயார் இன்று காலமாகியுள்ளார்.

“இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”.

பாதசாரிகள் வீதி மஞ்சக்கடவையில் கூட பாதுகாப்பாக வீதியைக் கடக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே எமது நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

தற்பொழுது ரமழானின் இறுதிவேளை என்பதால் காத்தான்குடி பிரதானவீதி, இருபத்து நான்கு மணிநேரமும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.

கடந்த ரமழான் காலங்களில் இவ்வேளைகளில்கூட பரிதாபகரமான வீதி விபத்துக்கள் காத்தான்குடியில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக சாரதிப்பத்திரமில்லாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளையும் கார், வேன் போன்ற வாகனங்களையும் வேகமாகச் செலுத்துவதால் பிரதான வீதியிலும், உள்ளுர் வீதிகளிலும் பாதசாரிகள் விபத்துக்குள்ளாகி இருந்தனர்.

குறிப்பாக பெருநாள் பகல்வேளைகளில் சிறுவர்கள் மோட்டார்சைக்கிள்களை காத்தான்குடியின் உள்ளுர்வீதிகளில் ஓடித்திரிவதால், சிறுவர்கள் உட்பட பாதசாரிகள் பலர் விபத்துக்குள்ளாகி இருந்ததையும் கடந்த காலங்களில் அறிய முடிந்தது.

இவ்வாறு சிறுவர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை செலுத்த அனுமதிக்கும் பெற்றோர்கள், இவ்விடயத்தில் அதிக அக்கரையுடன் செயற்படுமாரும், பாதசாரிகள் இவ்வாறான சிறுவர்களின் மோட்டார் சைக்கிள் சவாரிகள் விடயத்தில் அவதான மாக இருக்குமாரும் கேட்கப்படுகின்றனர்.

தேவைப்படுமிடத்து வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருக்கு அறிவித்து, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்குமாரும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

காலமான இத்தாயாருக்கு இப்புனித ரமழானில் அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை அருள்பாளிப்பானக! ஆமீன்.

Published by

Leave a comment