தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக ஜனாதிபதி அறிவிப்பு

MAITHRI-கொழும்பு: பாராளுமன்றத் தேர்தலில் தாம் நடுநிலை வகிக்கப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்பதல்ல. ஜனவரி 8 ஆம் திகதி நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்பதே நோக்கமாக வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியது எனது இணக்கப்பாடோடல்ல எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கட்சியின் பெரும்பான்மை எடுத்த தீர்மானமே அது என்றும் தெரிவித்தார்.

Published by

Leave a comment