ஹிஸ்புல்லாஹ்வுக்கே ஆதரவளிக்க மௌலவி அப்துர் ரஊப் கோரிக்கை

rauff moulaviகாத்தான்குடி: கடந்த வாரம் தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் செய்துகொண்ட தேர்தல்-மார்க்க ஒப்பந்தத்தின் பின்னர் பத்ரிய்யாவுக்குள் ஏற்பட்டிருந்த சலசலப்புக்கள் குறையாவிட்டாலும், அவசர அவசரமாக தனது ஆதரவாளர்களை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வை எதிர்வரும் தேர்தலில் ஆதரிக்குமாரு மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹி சற்று முன்னர் மஞ்சல் நிற துண்டுப்பிரசுரம் மூலமாக அறிவித்திருக்கிறார்.

எனினும், தனது கடந்த கால அசாதாரண சூழ்நிலையில் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உதவியதும், தான் எதிர்நோக்கிய வழக்கை தீர்த்து வைத்ததும், பள்ளிவாயல் கட்டடப் பணிக்கும், தனது கொள்கையை நிலைநிறுத்த உதவிய விடயங்களையும் கருத்திற்கொண்டு இத்தகைய முடிவு மறைமுகமாக எடுக்கப்பட்டாலும், ஊரின் பிரதிநிதித்துவத்தைக் காத்துக்கொள்ள எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவளிக்கும்படி மௌலவி ஏ.ஜே. அப்துர் ரஊப் மிஸ்பாஹி வெளிப்படையாகக் கேட்டிருக்கின்றார்.

Rauff-Moulavi-&-Hizbullah-2இதற்குப் பின்னணியில் பல அழுத்தங்களும், இன்னோரன்ன விடயங்களும் இருக்கின்றன. ஆனாலும், மௌலவி தரப்புக்குள் சலசலப்புக்கள் தொடர்கின்றதையும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலதிக விபரங்கள் விரைவில்.

– யுவர்காத்தான்குடிக்காக சுபானி றிபாயி

Published by

One response to “ஹிஸ்புல்லாஹ்வுக்கே ஆதரவளிக்க மௌலவி அப்துர் ரஊப் கோரிக்கை”

  1. Abdl Rauff in 3000 votes a than vasam petrukolla Nari kadumayaha poradi irikkum……. Allah yaavatrayum Arinthavan.

Leave a comment