ஷிராந்தி ராஜபக்ஸவின் வாகனம் கைப்பற்றப்பட்டது

wasim thajudeenகொழும்பு: மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட போது அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சவினால் நடத்திச் செல்லப்பட்ட “சிரிலிய சவிய” அமைப்பிற்கு சொந்தமான வாகனம் இரகசிய காவல்துறையினரைால் கைப்பற்றப்பட்டுள்ளது. றகர் வீரர் வசீம் தாஜுடீனினை கொலை செய்வதற்காக இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய வாசிம் தாஜூதீனின் கொலையில் ஷிராந்தி ராஜபக்சவின் ‘சிரிலிய’ நிறுவனத்துக்கு தொடர்பிருக்கலாம் என்ற வகையில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இக்கொலை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்வதற்காக எதிர்வரும் 10ம் திகதி தாஜுடீனின் ஜனாஸா தோண்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment