ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

  • englandSHM

லண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இங்கிலாந்து-அவுஸ்திரேலியா நடுவேயான சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் நடப்பாண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது.

முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும் 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில் 4வது டெஸ்ட் போட்டி நொட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பைத் தேர்ந்தெடுத்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த அவுஸ்திரேலியா வெறும் 60 ரன்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவார்ட் புரோட்ட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தபோது டிக்யேயர் செய்வதாக அறிவித்தது. ஜோ ரூட் அதிகபட்சமாக 130 ரன்கள் குவித்தார். 331 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ரோஜர்ஸ் 52, வார்னர் 64 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

england

ஆனால், ஸ்மித் 5, மார்ஷ் 2, கிளார்க் 14, விக்கெட் கீப்பர் நெவில் 17, ஜொன்சன் 5 ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டி இங்கிலாந்துக்கு வெற்றியை இலகுவாக்கினர். அவுஸ்திரேலிய அணி 253 ரன்களில் (72.4 ஓவர்கள்) ஓல்-அவுட் ஆனது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அவுஸ்திரேலியாவில் நடந்த முந்தைய ஆஷஸ் தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வைட்ட்வாஷ் ஆனது. ச

மீபத்தில் முடிந்த உலக கோப்பையில் காலிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது.

இந்நிலையில் ஆஷஸ் வெற்றி அந்த அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுத்துள்ளது.

Published by

Leave a comment