சோடாபோத்தலின் மூடிக்குள்
தடுக்கிவிழுந்ததில் நிகழ்ந்த தற்கொலை
யாரோ நாலுபேர் காறித்துப்பியதில்
இருண்ட வானம்
கிணற்றுநீர் உருப்பெருத்ததில்
உருவான சிறுகுளம்
நாயொன்று நக்கிக்குடித்ததில்
வற்றிப்போன பெருங்கடல்
காற்றடிச்சு
கனதூரம் பறந்த யானை
இப்படி
இத்தியாதி இத்தியாதியாய் நீண்ட அவன்
பெரும் உரையின் அடைப்புக்குறிக்குள்
அமானுஷ்யமாய்
கொட்டையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது
இது தேர்தல் காலம்
– பிரகாசக்கவி –
![what_politics_say__48305[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/07/what_politics_say__483051.jpg?w=110&h=150)
Leave a comment