கொழும்பு: 15 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தத் தேர்தலில் ஐ. ம. சு. மு அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. பிரதமராக வருவது என்ற என்னுடைய கனவு இல்லாமற் போயுள்ளது.
“நான் ஏற்றுக்கொள்கிறேன். சிறப்பான போட்டியொன்றில் நாம் தோல்வியடைந்துள்ளோம்’ என அவர் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. ஐ.ம.சு.மு ஆட்சியமைக்காத போதிலும், எதிர்க் கட்சி உறுப்பினராக அவர் தொடர்ந்தும் கடமையாற்றுவார் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Published by

Leave a comment