கொழும்பு: ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் தொடர்பில் காணப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நேற்று இரவுடன் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதற்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து தரப்பினரும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.
அது தேசிய அரசாங்கம் உருவாக்குவது தொடர்பிலான இணக்கப்பாடாகும். பொதுத் தேர்தலுக்கு அண்மித்திருந்த போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலளார் நீக்கப்பட்டு, புதிய செயலாளர் நியமிக்கப்பட்டமையினாலே அக் கட்சியின் தேசிய பட்டியல் தொடர்பில் சில பிரச்சினைகள் தோன்றியது.
எனினும் தற்போது அப் பிரச்சினைகள் நிறைவடைந்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
Published by

Leave a comment