“‘ஹி..ஹி’… மஹிந்த தரப்பினரும் அமைச்சுப் பதவி பெற்றுக் கொண்டமை நகைப்பிற்குரியது” அஸ்வர்

azverகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவான தரப்பினரும் அமைச்சுப் பதவி பெற்றுக்கொண்டமை நகைப்பிற்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தின் ஊடாக நாடாளுமன்றின் ஜனநாயகம் நிலைநாட்டப்படுகின்றது. ஆளும் கட்சியினதும் எதிர்க்கட்சிகளினதும் பங்களிப்பும் கருத்துக்களும் பிரதிபலிக்கப்படும்.

தேசிய அரசாங்கத்தின் ஆரம்பம் நல்லதே. எனினும் அது வெற்றியளிக்குமா தோல்வியடையுமா என்பது தெரியாது. மஹிந்தவிற்கு ஆதரவளித்த பலர் இன்று தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர். அது சரியா பிழையான என்பதனை விடவும் நகைப்பிற்குரியது என்பதனை உறுதியாக சொல்ல முடியும் என அஸ்வர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment