மக்கா: மக்கா ஹரத்தில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது 87 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். எப்படி இந்த விபத்து நடந்தது என்று தெரியவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் படங்களில் பலர் இறந்து கிடக்கும் காட்சிகளும் காயமடைந்து கிடக்கும் காட்சிகளும் காணப்படுகின்றன.
இம்மாதப் பிற்பகுதியில் ஹஜ் யாத்திரை துவங்கவிருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
ஹஜ் யாத்திரையின் போது உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கானவர்கள் இந்த புனித நகருக்கு வருகைதருவார்கள். வருடாவருடம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதால், ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் பள்ளிவாயலில் இருக்கும் வகையில் பள்ளிவாயலின் பரப்பளவை 4 லட்சம் சதுர மீட்டராக விரிவாக்கும் பணிகளை சவூதி அதிகாரிகள் கடந்த ஆண்டு துவங்கினர்.
இதற்கான கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்பட்டிருந்த கிரேன் ஒன்றுதான் தற்போது சரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையாக வீசிய காற்றின் காரணமாக இந்த கிரேன் விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அரேபியத் தீபகற்பம் முழுக்கவே கடந்த வாரத்திலிருந்து புழுதிப்புயல் வீசிவருகிறது.
Published by

Leave a comment