இங்கிலாந்து 3 விக்கட்டுக்களால் அபார வெற்றி: தொடர் சமநிலையில்!

morgan england– MJ

லீட்ஸ்: இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற 4வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவை 3 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 48.2 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப் பெற்று, வெற்றயீட்டியுள்ளது.

morgan england
அணியின் வெற்றிக்கு 92 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த இங்கிலாந்து அணித் தலைவர் மோர்கன்

இதுவரை இடம்பெற்ற 4 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், தொடர் சமநிலையில் உள்ளது.

5வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 13ம் திகதி மன்செஸ்டர் ஓல்ட் ட்ரஃப்போர்ட் மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

Published by

Leave a comment