-
ஹாசிப் யாஸீன்
சாய்ந்தமருது: சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினத்தின் அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு இன்று (22) திங்கட்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் கடற்கரை பிரதேசத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், அம்பாறை மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே.சிவகுமார், கரையோர பேணல் திணைக்களஒருங்கிணைப்பாளர் எம்.சமீர பெரேரா, மேஜர் சென்ரல் பீ.எம்.ஆர்.பண்டார, கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.சம்சுதீன், திவிநெகும தலைப்பீட முகாhமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் உள்ளிட்ட சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கரையோர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுக்களும் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சுத்தம் செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டு கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்படுகின்றது என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் இதன்போது தெரிவித்தார்.




Leave a comment