பாகிஸ்தான் சுப்பர் லீக் அணியை வாங்கும் சொஹைப் அக்தார்

suhaib aktharகராச்சி: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சொஹைப் அக்தார் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார். பி.எஸ்.எல். (PSL) என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் இருபது-20 போட்டி அடுத்த ஆண்டு (2016) பெப்ரவரி 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடக்கிறது.

ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது கட்டாரில் இந்த போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களான கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), கிறிஸ் கெய்ல், பிராவோ (மேற்கிந்திய தீவுகள்), மலிங்கா (இலங்கை) ஆகியோர் விளையாடுவதை உறுதி செய்துள்ளனர். தவிர, பாகிஸ்தான் வீரர்களான அப்ரிடி, உமர் அக்மல், முகமது ஹபீஸ், மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் பங்கேற் கிறார்கள்.

suhaib akthar

இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சொஹைப் அக்தர், இது தொடர்பாக பாகிஸ்தான் சுப்பர் லீக் அமைப்பின் தலைவர் நஜம் சேத்தியை சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “பாகிஸ்தான் கிரிக் கெட்டை மேம்படுத்தியதில் எனது பங்களிப்பு இருப்பதை விரும்புகிறேன். இதற்காக பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளேன். இந்தப் போட்டியை ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இதேபோன்று நானும் ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment