-
இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: காத்தான்குடியில் 2000 ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட நவீன தௌஹீத் வளர்ச்யையடுத்து, தாங்கள் தௌஹீத் வாதிகள் என தங்களை அடையாளப்படுத்தியவர்கள் ஆளுக்கொரு இயக்கத்தை ஆரம்பித்து மார்க்கம் என்ற அடிப்படையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் காத்தான்குடி தௌஹீத் வாதிகள் என்று ஒன்றாக இயங்க ஆரம்பித்த இவர்கள், இன்று 11 குழுக்களுக்கு மேலாக பிரிந்து செயற்பட்டு வருகின்றனர். பலர் இவ்வியக்கங்களைவிட்டும் பிரிந்து தனிமையில் தௌஹீத்வாதியாக தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத், கடந்த வருடம் அரபா நோன்பு நோற்பது நபி வழியல்ல எனும் கருத்தில் ஓர் மார்க்க தீர்ப்பை வழங்கியிருந்தது. அதாவது அரபா நோன்பு என்பது இஸ்லாத்தில் இல்லாத விடயம் எனவும், அரபா நோன்பு சம்பந்தமாக வரும் ஹதீஸ்கள் பொய்யானவை என்றும் இவ்வமைப்பு கூறியிருந்தது.
இன்றும் எவ்வித மாற்றுக் கருத்துக்களுமின்றி, அரபா நோன்பு இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பதை ஆணித்தரமாக தேசிய தௌஹீத் ஜமாஅத் கூறுகிறது.
இவ்வியக்கத்தின் இந்த மார்க்கத் தீர்ப்பின் பின்னர் பொதுமக்களுக்கு மென்மேலும் குழப்ப நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அரபா நோன்பு நோற்பது சம்பந்தமாக இடம்பெறும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை அவைகள் பொய்யான ஹதீஸ்கள் என்பதாக தேசிய தௌஹீத் ஜமாஅத் கூறுகிறது.
ஆனால் ஊரில் அமையப்பெற்றிருக்கும் ஜம்மிய்யத்துல் உலமா மற்றும் ஏனைய தௌஹீத் வாதிகள் அனைவரும் கடந்த வருடத்தில் இருந்து இன்றுவரைக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் அரபா நோன்பு என்பது இஸ்லாத்தில் இல்லை எனும் மார்க்கத்தீர்பிற்கு, எந்த பதிலையும் வழங்க முன்வரவில்லை.
சர்வதேசப் பிறைக்கு எதிராக கொழும்பிலிருந்து, கொழும்பு தௌஹீத் பேச்சாளர்களை காத்தான்குடிக்கு களமிறக்கும் சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத், மார்க்க பிரச்சார மேடைகளுக்கு இந்தியாவிலிருந்து தௌஹீத் பேச்சாளர்களை களமிறக்கும் தாருள் அதர் அத்தவ்விய்யா, காத்தான்குடி ஜம்மிய்யா, பிற அமைப்புக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மார்க்கக் கருத்துக்களை பிரசுரிக்கும் மார்க்க அறிஞர்கள் எவரும் தேசிய தௌஹீம் ஜமாஅத்தின் இந்த மார்க்கத்தீர்ப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் என்ன?
மார்க்கத்தைக் கற்றவர்கள் பொதுமக்களுக்கு அரபா நோன்பு நோற்பது இஸ்லாத்தில் உள்ளதா அல்லது இல்லையா என்பதை உடனடியாக அறியத்தருமாரு பொதுமக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
யுவர்காத்தான்குடிக்காக,

Leave a comment