Category: Your Kattankudy
-
“அமெரிக்காவைவிட அதிகளவான பெரும் செல்வந்தர்களைக் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது”
சங்காய்: அமெரிக்காவைவிட அதிகளவான பெரும்-செல்வந்தர்களைக் கொண்ட நாடாக சீனா முதல்தடவையாக மாறியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.’டொலர் பிலியனர்கள்’ என்று வர்ணிக்கப்படும், 100 கோடி டொலருக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரும் செல்வந்தர்கள் 596 பேர் சீனாவில் இருப்பதாக ஷங்காயை தளமாகக் கொண்டு இயங்கும் ஹுருன் ஆய்வுநிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.
-
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸஹீர் கான் ஓய்வு
ஹைதரபாத்: இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று வியாழனன்று அறிவித்துள்ளார். 37 வயதான ஸஹீர் கான், கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதல் முறையாக அவர் விளையாடினார்.
-
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை’: மகிந்த
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு ஆணைக்குழு முன்னால் இன்று ஆஜரானார். ஆணைக்குழு பிறப்பித்திருந்த உத்தரவொன்றுக்கு அமையவே, மகிந்த ராஜபக்ஷ அவரது வழக்கறிஞர்களுடன் அங்கு சமுகமளித்தார். அரச ஊடகமான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஒளிபரப்பான மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு பணம் செலுத்தத்தவறிய குற்றச்சாட்டிலேயே பெரும் ஊழல் மோசடிகள் தொடர்பான சிறப்பு ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
-
“தலைவராக எவரும் பிறப்பதில்லை, தகுதியில்லாத் தலைமைத்துவம் நிலைப்பதில்லை”
மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ் காத்தான்குடி: மிகப் பழமைவாய்ந்த அரசியல் வரலாற்றைக் கொண்ட தலைவர்களின் சந்ததிகள் இன்று தலைமைத்துவத்தில் இருந்து வருகிறார்கள். இருப்பினும் புரட்சிகர சமூக மாற்றத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் சமூக மாற்றங்களைச் செய்கின்றவர்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று உலகத் தலைவர்களிடையே இருக்கின்ற பிரச்சினைகளுள் தலையானது தலைமைத்துவப் பிரச்சினை. இவ் அதிகாரத்துவம்தான் சுரண்டலையும், அச் சுரண்டலுக்கான நியாயங்களையும் சமூகத்தில் கற்பிக்கின்றது.
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கானுக்கு கிழக்கு மகாண சாஹித்திய விருது
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சிரேஷ்ட ஊடகவியலாளரும், தேசிய சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான ரீ.எல்.ஜவ்பர்கான் 2015ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண சாஹித்திய விருதை வென்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் வெளியான நூல்களுள் சிறந்த நூலாக கவிஞர் ஜவ்பர்கான் எழுதிய முறிந்த சிறகும் என்வானமும் கவிதை நூல் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-
சங்கா- மஹேல இணைப்பாட்ட சாதனையை திமுத்து – சந்திமால் ஜோடி முறியடிப்பு!
கொழும்பு: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இலங்கை அணியின் 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை 14 ஆண்டுகளின் பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் கடந்த 2001 ஆம் ஆண்டு 162 ஓட்டங்களைப் பெற்றிருததே இது வரை சாதனையாக இருந்து வந்தது.
-
முஹர்ரம் பிறந்தது
முஸ்லிம் வருடமொன்று முற்றுப் பெற்றது இன்னுமொரு வருடம் எட்டிப் பார்க்குது எத்தனை மாற்றங்கள் இந்த வருடத்துள் அத்து மீறிய ஆட்சி கவிழ்ந்தது
-
காத்தான்குடியில் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த 12 வருடங்களாக காத்தான்குடியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பல்வேறு வகையான சமூகசேவைகளில் ஈடுபட்டு வரும் இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் இரத்ததான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
-
பாலர் பாடசாலை கல்விப் பணியக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது
எம்.ஐ. அப்துல் நஸார் மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் வதிவிடப் பயிற்சி நெறியொன்று கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பிரிவினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய நிலையத்தில் நடாத்தப்பட்டது.
-
பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணமாக்க துரித நடவடிக்கை!
சப்னி அம்பாறை: அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆவணமாக்கப்படவிருக்கின்றன.அதற்கான துரித ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவ் ஆவணமாக்கல் நூல் நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
-
ஜப்பானியத் தூதுக் குழுவினர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சந்திப்பு
கொழும்பு: இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கீனிச்சி சுகனுமா உட்பட ஜப்பானியத் தூதுக் குழுவினர் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
-
வெலே சுதாவுக்கு மரண தண்டனை
கொழும்பு: வெலே சுதா’ என அழைக்கப்படும், கம்பள விதானகே சமன்த குமாரவிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப் பொருள் 7.06 கிராமை தன்வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவர், கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று (14) ஆஜர்படுத்தப்பட்டார்.