கொழும்பு: இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கீனிச்சி சுகனுமா உட்பட ஜப்பானியத் தூதுக் குழுவினர் புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை அமைச்சுக் காரியாலயத்தில் நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை வசதிகள், விவசாய தொழிநுட்ப வசதிகள், மீன்பிடிக் கைத்தொழில், மற்றும் பனை அபிவிருத்தி கைத்தொழில் துறைகளில் உதவுமாறு ஜப்பானியத் தூதுக் குழுவினரிடம் இதன் போது கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வின் போது அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானஜோதியும் கலந்து கொண்டார்.
- ஏ.எல்.எம். தாஹிர்
ஊடகப் பிரிவு,
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

Leave a comment