சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஸஹீர் கான் ஓய்வு

zaheer khanஹைதரபாத்: இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று வியாழனன்று அறிவித்துள்ளார். 37 வயதான ஸஹீர் கான், கடந்த 14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதல் முறையாக அவர் விளையாடினார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் வெல்லிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் கடைசியாக சர்வதேச மட்டத்தில் விளையாடினார்.

இதுவரை ஸஹீர் கான் விளையாடிய 92 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் 282 விக்கெட்டுகளையும், 17 இருபது-ஓவர் போட்டிகளில் 17 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். மொத்தமாக 610 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

zaheer khan
ஸஹீர் கான்

இந்தியா கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஸஹீர் கானும் ஒருவர் என்றும் கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகளுக்கு ஸஹீர் கானும் முக்கிய பங்காற்றினார் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்தார்.

ஸஹீர் கானுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், மட்டை பிடிப்பாளர்களின் எண்ணத்தை முன்கூட்டியே உணர்ந்து அவர்களை தனது பந்துவீச்சினால் முறியடிப்பவர் ஸஹீர் என்று தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment