கொழும்பு: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக இலங்கை அணியின் 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை 14 ஆண்டுகளின் பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாக குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோர் கடந்த 2001 ஆம் ஆண்டு 162 ஓட்டங்களைப் பெற்றிருததே இது வரை சாதனையாக இருந்து வந்தது.
இந்த இணைப்பாட்ட சாதனையை 14 வருடங்களின் பின்னர் திமுத்து கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமல் ஆகியோரால் 238 ஓட்டங்களைப் பெற்று முறியடிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 2 ஆம் நாள் ஆட்டத்தின் போதே 3 ஆவது விக்கெட்டுக்கான இணைப்பாட்ட சாதனை முறியடிக்கப்பட்டது.
இதன்போது திமுத்து கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் ஆகக்கூடிய ஓட்டப்பெறுதியை பதிவு செய்தார். அவர் 186 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்ததுடன் சந்திமல் 156 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.
இரு விக்கெட்டுக்கு 250 ஓட்டங்களுடன் இன்றைய 2 ஆம் நாளை ஆரம்பித்த இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து 434 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய மிலிந்த சிறிவர்தன ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
Leave a comment