ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஊழலை விசாரிக்க அதிகாரம் இல்லை’: மகிந்த

Mahinda%20Rajapaksa[1]கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஊழல் மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு ஆணைக்குழு முன்னால் இன்று ஆஜரானார். ஆணைக்குழு பிறப்பித்திருந்த உத்தரவொன்றுக்கு அமையவே, மகிந்த ராஜபக்ஷ அவரது வழக்கறிஞர்களுடன் அங்கு சமுகமளித்தார். அரச ஊடகமான சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஒளிபரப்பான மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்கு பணம் செலுத்தத்தவறிய குற்றச்சாட்டிலேயே பெரும் ஊழல் மோசடிகள் தொடர்பான சிறப்பு ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதுதொடர்பான வாக்குமூலத்தைப் பெறுவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆணைக்குழு முன்பாக அழைக்கப்பட்டிருந்தார். இன்று விசாரணை துவங்கியபோது, ஆட்சேபணை தெரிவித்த மகிந்த ராஜபக்ஷவின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் இல்லை என்று வாதிட்டனர்.

இதனையடுத்து, விசாரணைகளை தற்காலிகமாக நிறுத்திய ஆணைக்குழு, ஆட்சேபணை சம்பந்தமான முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று அறிவித்தது. இதனையடுத்து, ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினர், அரசியல் நோக்கத்துடனேயே மகிந்த ராஜபக்ஷவை அரசாங்கம் ஊழல்விசாரணை ஆணைக்குழு முன்னால் அழைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Published by

Leave a comment