பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆவணமாக்க துரித நடவடிக்கை!

  • சப்னி

amparaஅம்பாறை: அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவையின் பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆவணமாக்கப்படவிருக்கின்றன.அதற்கான துரித ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவ் ஆவணமாக்கல் நூல் நவம்பர் மாத நடுப்பகுதியில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை விசேட நிறைவேற்றுச்சபைக்கூட்டம் காரைதீவு சண்முகா மகா வித்தியாயலத்தில் பேரவைத்தலைவர் தேசமான்ய. ஜலீல் ஜீ தலைமையில் நடைபெற்றபோது மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் பெண் எழுத்தாளர்களின் படத்துடன் கூடிய சுயவிபரத்துடன் தமது படைப்புகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொகுப்பாளரும் தலைவருமான ஜலீல் ஜீ கேட்டுள்ளார். தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 077 3134818.

ampara
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப்பேரவை கூட்டம்

அதேவேளை மறைந்த பெண்எழுத்தாளர் பாண்டிருப்பு திருமதி க.லோகிதராஜாவிற்கான இரங்கல்நிகழ்வை எதிர்வரும் 27ஆம் திகதி கல்முனை நால்வர்கோட்ட மண்டபத்தில் நடாத்தவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. அதில் “கமலதீபம்” எனும் நினைவுமலரொன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரி.சகாதேவராஜா தெரிவித்தார்.

 

Published by

Leave a comment