Category: Your Kattankudy
-
ரிசாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்
ஏ.எச்.எம். பூமுதீன் அட்டாளைச்சேனை: அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி முகா அம்மக்களை ஏமாற்றி விட்டது.
-
மக்கா,மதீனாவில் மழைதேடித் தொழுகை
– மெளலவி. எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)- புனித மக்கா – கஃபாவிலும், புனித மதீனா – மஸ்ஜிதுன் நபவிய்யிலும் இன்று (வியாழக்கிழமை – 29/10/2015) காலை பஜ்ர் தொழுகையின் பின்னர் “ஸலாதுல் இஸ்திஸ்கா” -மழை தேடித் தொழும் தொழுகை- இடம்பெற்றது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி: காத்தான்குடி வாசிகசாலையின் முன்னாள் நூலகர் மீராசாஹிப் அவர்கள் இன்று காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்திக்கின்றோம்.
-
வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின் பிரதான மனிதர் அமைச்சர் றிசாத் பதியுதீன்
அபூ அஸ்ஜத் மன்னார்: இலங்கையின் அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்த முஸ்லிம் தலைவர்களில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முதலிடம் வகிப்பதை ஒருபோதும் எம்மால் மறந்து பேச முடியாது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்ட புலிகளுடன் முட்டி மோதி அரசாங்கத்தின் பாதுகாப்பினை ஓரளவேனும் பெற்றுக்கொடுத்த அந்த பெருந்தகை இன்று இந்த மண்ணில் இல்லாத போதும்அவரது பணிகளை மக்கள் நினைவு கூர்ந்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
-
“மிஸ்ட் கோல்” அறிமுகம் – துஷ்பிரயோகத்தில் முடிவு
பயாகலை: பயாகலையைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவர், வாத்துவ பகுதியைச் சேர்ந்த வயது குறைந்த சிறுமி ஒருவருடன் தொலைபேசி மூலம் அறிமுகமாகி துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி மேற்கொண்ட “மிஸ்ட்கோல்” ஒன்றின் மூலம் இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.
-
10 வருடங்களின் பின் ஐரோப்பிய விமானம்
எம்.ஐ.ஏ. நஸார் கொழும்பு: சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பிய விமானம் ஒன்று இலங்கை வந்துள்ளது. ஐரோப்பிய விமான சேவைகளில் ஒன்றான ஒஸ்ட்ரியன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே, இன்று (28) காலை 7.25 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையம் வந்தது.
-
சமுர்த்தி: குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களை இனங்காண்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்
எம்.ஐ. அப்துல் நஸார் காத்தான்குடி: வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களை இனங்காண்பதற்கான ஆய்வுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வறுமையை ஒழிக்கும் முதன்மை வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கு பல்வேறு கருத்திட்டங்களைச் செயற்படுத்தி இதுவரையில் 20 வருடங்கள் மட்டளவிலான காலங்கள் கடந்துள்ளன.
-
நோத் சீ வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக எஸ்.டி. பரமேஸ்வரன் நியமனம்
கொழும்பு: நோத் சீ வரையறுக்கப்பட்ட கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக எஸ்.டி. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத்தாபன கட்டளைச் சட்டத்தின் 74ம் உறுப்புரையின் படி புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
-
“நான் மரணித்தால் மாத்திரமே நாளை கல்குடா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடை நிறுத்தப்படும்” – கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ்
எம்.ரீ.எம். பாரிஸ் கல்குடா: கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் கல்குடா பிரதேசத்துக்கான அபிவிருத்தி செயற்பாடு குறித்து மேற்கொள்ளப்பட்ட அரச பணிகளையும்,சேவைகளையும் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை வெற்றிகரமாக கல்குடா பிரதேசத்தில் முன்னொடுக்கப்படும் என முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
-
காணவில்லை
MJ மழை வந்தால் வெள்ளம் வரும் தவளை கத்தும் புற்புதர்களுக்குள்ளும் வடிகாண்களுக்குள்ளும் பாம்புகள் ஒழிந்துகொள்ளும்
-
2016 இருபது-20 உலகக் கிண்ணத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் எச்சரிக்கை
லாஹூர்: இந்தியாவுடன் இந்த ஆண்டில் நடத்த திட்டமிட்டிருக்கும் போட்டியில் இந்திய அணி பங்கேற்க தவறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இருபது-20 உலகக் கிண்ண போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிரி நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் 2015 முதல் 2023க்குள் ஆறு கிரிக்கெட் தொடர்கள் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு அதன் முதலாவது தொடரை
-
இஸ்ரேலைப் புறக்கணிக்கும் பிரிட்டிஷ் கல்வியாளர்கள்
லண்டன்: பலஸ்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் “சகித்துக்கொள்ள முடியாத அநீதிகளுக்கு” எதிராக இஸ்ரேலிய உயர்கல்விக் கூடங்களை தாங்கள் புறக்கணிக்கப்போவதாக பிரிட்டனில் உள்ள நூற்றுக்கணக்கான கல்வியாளர்கள் கூறியிருக்கிறார்கள். பிரிட்டனிலிருந்து வெளியாகும் “கார்டியன்” பத்திரிகையில் அவர்கள் வெளியிட்ட முழுப்பக்க விளம்பரத்தில், இந்தப் பிரகடனம் வெளியாகியிருக்கிறது.