“மிஸ்ட் கோல்” அறிமுகம் – துஷ்பிரயோகத்தில் முடிவு

child abuse mobile phoneபயாகலை: பயாகலையைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவர், வாத்துவ பகுதியைச் சேர்ந்த வயது குறைந்த சிறுமி ஒருவருடன் தொலைபேசி மூலம் அறிமுகமாகி துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமி மேற்கொண்ட “மிஸ்ட்கோல்” ஒன்றின் மூலம் இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.

பின்னர் அச்சிறுமி, குறித்த இளைஞனை வீட்டுக்கு வரவழைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போதே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

child abuse mobile phone
“மிஸ்ட் கோல்” அறிமுகம் – துஷ்பிரயோகத்தில் முடிவு

இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார், இவ்வாறான முட்டாள்தனமான விடயங்களில் ஈடுபடுவதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறு சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Published by

Leave a comment