10 வருடங்களின் பின் ஐரோப்பிய விமானம்

  • எம்.ஐ.ஏ. நஸார்

planeகொழும்பு: சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பிய விமானம் ஒன்று இலங்கை வந்துள்ளது. ஐரோப்பிய விமான சேவைகளில் ஒன்றான ஒஸ்ட்ரியன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றே, இன்று (28) காலை 7.25 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையம் வந்தது.

கடந்த 2005 இற்கு பின்னர் ஐரோப்பிய நாடொன்றிலிருந்து, பயணிகள் விமானம் எதுவும் இலங்கைக்கு வரவில்லை.

plane

எதிர்வரும் 2016 மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் இலங்கை நோக்கி வரவுள்ள இவ்விமானம், வியாழக்கிழமை பிற்பகலில் மீண்டும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இலங்கையிலிருந்து இங்கிலாந்து தவிர்ந்த, ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதாயின், சிங்கப்பூர், துபாய் ஊடாகவே பயணிக்க வேண்டியிருந்ததோடு, இதனால் மிக நீண்ட நேரத்தை செலவிட வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment