2016 இருபது-20 உலகக் கிண்ணத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் எச்சரிக்கை

pakistanலாஹூர்: இந்தியாவுடன் இந்த ஆண்டில் நடத்த திட்டமிட்டிருக்கும் போட்டியில் இந்திய அணி பங்கேற்க தவறும் பட்சத்தில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் இருபது-20 உலகக் கிண்ண போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிரி நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் 2015 முதல் 2023க்குள் ஆறு கிரிக்கெட் தொடர்கள் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பதோடு அதன் முதலாவது தொடரை

நடத்த இன்னும் இணக்கம் ஏற்படவில்லை. இது தொடர்பான பேச்சுவார்த் தைக்கு தீவிர ஹிந்து தேசியாவதிகளின் எதிர்ப்பால் தடங்கல் ஏற்பட்டது.

இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடரில் பங்கேற்க இந்தியா இணங்காவிட்டால், தமது அரசு இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அணிக்கு உத்தர விடும் வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.

இருபது-20 உலகக் கிண்ணம் 2016, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டதால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரு தரப்பு டெஸ்ட் தொடர் ஒன்று கடந்த 2007 தொடக்கம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment