நீரில் மூழ்கி மரணித்த நிமாலி – நிர்மலா

nirmalaபுத்தளம்: ரம்பொடை ஒயாவில் நீராடச் சென்ற இளம் பெண்கள் இருவர் நீரில் அடித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர். ஆர்.எஜ்.ஷகீலா நிமாலி வயது 33 ,டி.நிர்மலா மானெல் வயது 33 ஆகிய இருவருமே நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறிய கிலேத்தேவ, முகுனு வட்டவல, அலாவத்தை, புத்தளம் என்ற விலாசத்தை கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.புத்தளம் அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர் வரும் வழியில் ரம்பொடை ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.

குறித்த குழுவினரில் அநேகமானவர்கள் நீராடிய பின்பு வெளியேறியுள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் நீண்ட நேரமாக நீராடிக் கொண்டிருந்துள்ளனர். இதன் போது திடீரென நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

nirmalashakila

இவருடன் வருகை தந்த அனைவரும் இவர்களை காப்பாற்ற பெரும் முயற்சி செய்துள்ள போதும் நீரின் வேகம் அதிகமாக காணப்பட்டதன் காரணமாக இவர்களை காப்பாற்ற முடியவில்லை. இவர்கள் இருவரும் ரம்பொடை ஒயாவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

death

Published by

Leave a comment