Category: Your Kattankudy
-
மஹிந்தவுடன் கைகோர்க்கும் முக்கிய அமைச்சர்!
கொழும்பு: நல்லாட்சி அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்பினை வகிக்கும் அமைச்சர் ஒருவர், கடந்த வாரம் தனது அமைச்சினுள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் தனது குடும்பத்துடன் உயர்ந்த இடத்ததிற்கு செல்ல திட்டமிட்டு முடியாமல் போயுள்ளதாக அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த அமைச்சரின் ஊடக பிரிவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நல்லாட்சி மீது குறித்த அமைச்சர் அதிருப்தி அடைந்துள்ளார்.இதுவொரு நல்லாட்சியே கிடையாது.
-
பாராளுமன்றத்தை வேறு சபையாக மாற்ற பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கிடையாது: அஸ்வர்
சாய்ந்தமருது எம்.எஸ்.எம். சாஹிர் கொழும்பு: அரசியலமைப்பில் சீர்திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தீவிரமாக செயற்படுகின்றது. எமது பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் படி அரசியல் திருத்தங்களை இலகுவாக மேற்கொள்ள முடியாதென முன்னாள் பாராளுமன்ற முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை அமைப்பது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
-
இன நல்லுரவை பேனும் வகையில் வாழைச்சேனை காகித ஆலையினை கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதே பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கம்: நெளசாட் (காணொளி)
ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் வாழைச்சேனை: இன நல்லுரவை பேனும் வகையில் வாழைச்சேனை காகித ஆலையினை கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதே பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கம் என்றும், காலத்தின் தேவைக்கேற்ப அமைச்சர் றிசாட் பதுர்டீனை தேசிய தலைமையாயாக ஏற்றுகொள்வதே சாலப்பொறுத்தமான விடயமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பின் தலைவரும் வாழைச்சேனை காகித அலையின் இணைப்பதிகாரியுமான எம்.ஜே.எம்.அன்வர் நெளசாட் உடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.
-
42,650 கோடி ரூபாவை சுருட்டிய மஹிந்த குடும்பம்!
கொழும்பு: மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.
-
இஸ்தான்புல்லில் குண்டுத் தாக்குதல்; பத்து பேர் பலி
இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெரும் குண்டொன்று வெடித்துள்ளது.நகருடைய பழைய பகுதியின் மையத்தில் அமைந்துள்ள சுல்தானஹ்மட் சதுக்கத்தை இந்த குண்டுவெடிப்பு அதிரவைத்துள்ளது.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்ற ஒரு இடம் இது.குண்டுவெடிப்பை அடுத்து தற்போது அப்பகுதியை பொலிசார் அடைத்துள்ளனர்.
-
நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி சின்னப் பள்ளிவாயலில் மர நடுகை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நல்லாட்சி அரசாங்கத்தின் ஓர் ஆண்டு பூர்த்தியையொட்டி காத்தான்குடி-05, 164 ஏ கிராம சேவகர் பிரிவில் மர நடுகை நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை காத்தான்குடி சின்னப் பள்ளிவாயலில் 164 ஏ கிராம சேவகர் ஏ.யூ.ஏ.புவாட் தலைமையில் இடம்பெற்ற போது காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹக்கீம் மரம் நடுவதையும்
-
தொழில் கஷ்டங்கள்
ஆலிம் ஆகு ட்ரஸ்டி போட்டால் கஷ்டப் படுவாய். மோதின் ஆகு மேதினம் உட்பட நீ தினம் வேலை டொக்டராயிரு டொக் டொக் டொக் டோரில் சாமத்திலும்
-
இஸ்லாமிய ஷரீஆவில் விபச்சாரிகளை கல்லெறிந்து கொல்வதற்கான காரணம் என்ன? அத்தியாயம்-௦2
முஹம்மது நியாஸ் திருமணமான ஆணும் பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டு அக்குற்றமானது நிரூபிக்கப்பட்டால் அவ்விருவரையும் கல்லெறிந்து கொல்லும்படி இஸ்லாமிய குற்றவியல் சட்டமான ஷரீஆ கட்டளையிடுகிறது. ஆனாலும் சமகாலத்தில் இந்த விடயத்தை சரிவர புரிந்துகொள்ளாத சிலரும், புரிந்துகொண்டாலும் இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் சேறு பூசுவதற்காகவே காத்திருக்கின்ற சில போலி முற்போக்குவாதிகளும் முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்கும் நன்னோக்கிலேயே இத்தொடர்கட்டுரை வரையப்படுகிறது.
-
“இலங்கை முஸ்லிம்கள் எந்தப் பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்புபட்டவர்கள் அல்லர்”
ஐ.நா உயரதிகாரியிடம் அமைச்சர் றிசாத் உறுதிபடத் தெரிவிப்பு பர்வீன் சனூன் கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
கடனுக்கு குடித்தவர் தாக்கப்பட்டு மரணம்: வெலிமடையில் பதற்றம்
வெலிமடை: வெலிமடை நகரிலுள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் இன்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி, டயரபாவத்தை பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றிற்கு கடனுக்கு மதுபானம் அருந்தியதாகத் தெரிவிக்கப்டும் 29 வயது இளைஞர் ஒருவர், குறித்த மதுபானசாலை ஊழியர்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
தேர்தல் வருகிறது
எங்கள் ஊருக்கும் இலக்ஸ்ன் வருகிறது ரெண்டு தரப்பாரும் ரெடியா ஆகிறாங்க. அபிவிருத்தி கோஷத்தால் அம்ப்லிபயர் அதிரும் ஊழல் என்ற எதிர்ப்பேச்சால் ஒலி பெருக்கி உதிரும்.
-
ஆற்றங்கரை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு; NFGG நடவடிக்கை
காத்தான்குடி: காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதி மீனவர்களினதும், அப்பிரதேச மக்களினதும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் கள விஜயம் ஒன்றினை NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்று மேற்கொண்டார்.இன்று காலை 09.00 மணியளவில் அப்பகுதிக்குச் சென்ற பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அப்பிரதேச மீனவர்களின் முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களுக்கான உடனடித் தீர்வுகளையும் பெற்றுத் தருவதாக உறுதியளித்ததோடு அதற்கான நடவடிக்கைகளை இன்றே ஆரம்பித்திருக்கின்றார்.