தேர்தல் வருகிறது

Elections 2015எங்கள் ஊருக்கும்
இலக்ஸ்ன் வருகிறது
ரெண்டு தரப்பாரும்
ரெடியா ஆகிறாங்க.

அபிவிருத்தி கோஷத்தால்
அம்ப்லிபயர் அதிரும்
ஊழல் என்ற எதிர்ப்பேச்சால்
ஒலி பெருக்கி உதிரும்.

ஈச்ச மரம் லைற்றாலே
இரவு பகலாகும்
காச்ச காய்க்கு கணக்குக் கேட்டு
காட்டமாய் நோட்டிஸ் வரும்

அரசியலுக்காய் அத்வைதம்

அடக்கி வாசிக்கும்
தானறியாமல் தவ்ஹீது

தரீக்காவை ஆதரிக்கும்.

மெயின் ரோட்டின் அழகு
மெச்சப்படும் கூட்டங்களில்
உள்ரோட்டின் அசிங்கங்கள்
ஒவ்வொன்றாய் அரங்கேறும்

Elections 2015

மந்திரிப் பதவி காட்டி
மைத்திரியின் ஆள் என்பார்
நல்லாட்சிப் பெயர் காட்டி
நாம்தான் அதுவென்பார்.

பேஷ்புக்கில் நண்பர்கள்
பேசாமல் block ஆவார்
தூசு பிடித்த வீடியோக்க்கள்
துடைத்து வெளியே வரும்

யாரையும் ஆதரிக்க
இதனை எழுதவில்லை
ஊரின் நடைமுறையை
உள்ளபடி எழுதினேன்.

  • காத்தான்குடி நிஷவ்ஸ்

Published by

Leave a comment