கடனுக்கு குடித்தவர் தாக்கப்பட்டு மரணம்: வெலிமடையில் பதற்றம்

welimada stf armyவெலிமடை: வெலிமடை நகரிலுள்ள மதுபானக் கடை ஒன்றில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் இன்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி, டயரபாவத்தை பகுதியிலுள்ள மதுபானக் கடை ஒன்றிற்கு கடனுக்கு மதுபானம் அருந்தியதாகத் தெரிவிக்கப்டும் 29 வயது இளைஞர் ஒருவர், குறித்த மதுபானசாலை ஊழியர்களால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், வைத்தியசாலையில் வைத்து இன்று (11) உயிரிழந்ததை அடுத்து, குறித்த நபரின் உறவினர்களால் வெலிமடை – பண்டாரவளை வீதியிலுள்ள குறித்த மதுபானசாலை தாக்கப்பட்டதோடு, வீதித்தடையும் ஏற்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, குறித்த பிரதேசத்தில், இராணுவ அதிரடிப் படையினரின் (STF) உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

welimada stf army

Published by

Leave a comment