Category: Your Kattankudy
-
கடற்கரை வீதிக்கு தற்காலிகமான தீர்வினை பெற்றுக்கொடுத்தார் பொறியியலாளர் சிப்லி பாறுக்
காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள இரு பாலங்களினதும் ஓரப்பகுதிகள் மிக மோசமாக சேதமடைந்து காணப்படுவதால் தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமன்றி மக்கள் பல்வேறு சிரமங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
-
இன்று முதல் ஆயுதங்களை கையளிக்கலாம்
கொழும்பு: சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கின்ற ஆயுதங்களை கையளிப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள பொதுமன்னிப்பு காலம் இன்று (25) முதல் ஆரம்பமாகின்றது.அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை, அனுமதிப்பத்திரமின்றி தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்தில் அதிரடி: 171 ஓட்டங்கள் குவித்து அசத்திய குமார் சங்கக்காரா
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியில் சர்ரே அணியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா விளையாடி வருகிறார். நேற்று தொடங்கிய சமர்செட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அசத்திய குமார் சங்கக்காரா சதம் விளாசினார். அவர் 176 பந்தில் 24 பவுண்டரி, 4 சிக்சர்கள் உட்பட 171 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
-
அரபுக் கலாசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு
எஸ். ஸஜாத் முஹம்மத் நீர்கொழும்பு: இலங்கை அரபுக் கலாசாலைகள் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற அரபுக் கல்லூரிகளுக்கிடையிலான பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. தாருல் புர்கானுல் கரீம் அரபுக் கல்லூரி மற்றும் நீர்கொழும்பு அஷ்-ஷபாப் விளையாட்டுக் கழகம் ஆகியன ஒன்றிணைந்து நடத்திய இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த 23, 24 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
-
பச்சை மிளகாய் சாப்பிடுங்கள்
கார உணவுகள் சாப்பிடவேண்டுமென்று ஆசைப்பட்டால் காரப்பொடிகைளை அதிகம் தூவிவிட்டு சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு பச்சை மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய் காரம் மிகுந்தது தான் என்றாலும், உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. 100 கிராம் பச்சை மிளகாயில் அடங்கியுள்ள சத்துக்கள்
-
தீர்வு முன்மொழிவுகள் தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை NFGG கேட்டறிந்தது
NFGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பில் NFGGயினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு முன்மொழிவுகள் தொடர்பாக காத்தான்குடிபிரதேசபொதுமக்களின்கருத்துக்களைக்கேட்டறியும்விஷேடசந்திப்பொன்றுகடந்த22.04.16 அன்று இடம்பெற்றது. NFGGயின் காத்தான்குடி பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது NFGGயினால் முன்வைக்கப்பட்ட தீர்வு முன் மொழிவுகள் தொடர்பில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விளக்கங்களை வழங்கியதோடு, பொது மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
-
முஸ்லிம்களுக்கான தேவை என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்! வட மாகாண சபை சொல்லவேண்டியதில்லை: ரிசாட்
வவுனியா: முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வவுனியா, நெளுக்குளம் பகுதியில் சதொச விற்பனை நிலையத்தின் 317 வது கிளையினை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
-
‘கொழும்பு நகரில் காணிகளை அவசரப்பட்டு விற்க வேண்டாம்’: பிரதமர்
கொழும்பு: கொழும்பு நகரில் உள்ள காணிகள் மற்றும் சொத்துக்களை அவசரமாக விற்பனை செய்வதை தவிர்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நகர மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.தமக்கு சொந்தமான காணிகளை அவசரமாக விற்பனை செய்ய வேண்டாம். அந்த காணிகளை அப்படியே வைத்திருங்கள். அடுத்த ஓரிரு வருடங்களில் சிறந்த விலைக்கு அவற்றை விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
-
தலையில் பந்து அடிபட்ட நிலையில் கௌஷல் சில்வா மருத்துவமனையில்
கண்டி: இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா, பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக, கண்டி பல்லேகெல மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் கௌஷல் காயமடைந்துள்ளார். உடனடியாக கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் அவர் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
-
ஹஜ் விவகாரத்தில் நானும் விலை பேசப்பட்டேன்; சாய்ந்தமருதில் அமைச்சர் ஹலீம்!
அஸ்லம் எஸ்.மௌலானா சாய்ந்தமருது: கடந்த காலங்களில் ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
-
‘தான் ஆச்சரியமடைந்த அந்த இரு சந்தர்ப்பங்கள்’ – கூறுகிறார் ஜனாதிபதி
அம்பலாங்கொட: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு முறை தான் ஆச்சரியமடைந்த சந்தர்ப்பங்கள் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் அம்பலாங்கொட தொகுதி சம்மேளன கூட்டம், அம்பலாங்கொட தர்மாசோகா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
-
மஹிந்தவின் கோட்டைக்குள் நுழைந்த மைத்திரியின் உளவாளி!
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பத்தரமுல்ல அலுவலகத்திற்கு அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய நபர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவு எனப்படும் SISன் உறுப்பினர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க புலனாய்வு பிரிவினால் பல்வேறு வேலைகளுக்காக இந்த உறுப்பினரை பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர்.