தலையில் பந்து அடிபட்ட நிலையில் கௌஷல் சில்வா மருத்துவமனையில்

kaushal_silva_கண்டி: இலங்கை கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா, பயிற்சியின் போது தலையில் பந்து அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்காக, கண்டி பல்லேகெல மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே, இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் கௌஷல் காயமடைந்துள்ளார். உடனடியாக கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக விமானம் மூலம் அவர் கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

விக்கெட்டுக்கு அருகே களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது, தினேஷ் சந்திமால் அடித்த பந்தே கௌஷலின் தலையில் பட்டுள்ளது. தலையில் பந்து பட்ட பின்னர் சக அணி வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த கௌஷல், அதிர்ச்சிக்கு உள்ளாகியவராக காணப்பட்டதாக அங்கிருந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறினார். எனினும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகின்றது.இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை நடந்த பயிற்சி போட்டியில் கௌஷல் சில்வா சதம் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

kaushal_silvakaushal_silva_

Published by

Leave a comment