Category: Your Kattankudy
-
அதிக வெப்பம்: வடமத்திய மாகாண பாடசாலைகள் 12 மணி வரை
கொழும்பு: வடமத்திய மாகாண பாடசாலைகளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவு செய்ய தீர்மானித்துள்ளதாக வடமத்திய மாகாண பணிப்பாளர் திருமதி ஈ.எம்.என்.டப்ளியூ. ஏகநாயக்க தெரிவித்தார். அதிக வெப்ப காலநிலை நிலவுவதன் காரணமாகவே குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் 12 மாணவர்கள் மயக்கமுற்று வீழ்ந்தமையே இம்முடிவுக்கான முக்கிய காரணம் என தெரிவித்தார்.
-
பிக்கு ஒருவருக்கு காதல் கடிதம் கொடுத்த மாணவி வைத்தியசாலையில்!
அக்குரண: பௌத்த பிக்கு ஒருவருக்கு மூன்றரை அடி நீளம் கொண்ட காதல் கடிதம் எழுதிய மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த சம்பவத்தை அடுத்து குறித்த மாணவியையும்,அவரது பெற்றோரையும் விகாரைக்கு அழைத்த குறித்த பிக்கு, மாணவியை பிரம்பால் தாக்கியுள்ளார்.
-
ஐந்து கடவுச்சீட்டுகளுடன் யோஷித ராஜபக்ஸ
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருப்பதாக நிதி குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் யோஷித போலியான தகவல்களை வழங்கியதாக பொலிஸ் பிரிவு அதிகாரிகள் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். யோஷித ராஜபக்சவிடம் உள்ள 5 வெளிநாட்டு கடவுசீட்டுகளையும் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வு பிரிவினருடன் ஒப்படைக்குமாறும், அவர் உட்பட வழக்கின் சந்தேக நபர்கள் பங்கு சந்தையில் மேற்கொண்ட முதலீடு பற்றிய அறிக்கை ஒன்றையும் பொலிஸ் நிதி…
-
பிரித்தானியாவைக் கலக்கும் லிபரா (Lebara) மொபைல் சேவையின் வரலாறு தெரியுமா?
லண்டன்: லண்டன் விமான நிலையம் அல்லது ரெயில் நிலையங்களில் பளிச்சிடும் நீல நிற சிம் அட்டை விற்பனை செய்பவர்களை கடந்து வந்திருந்தால், நிச்சயமாக லிபரா மொபைலை கடந்து வந்திருப்பீர்கள்.,லிபரா மொபைல் நிறுவனம் பற்றி சிறிய அளவில் தெரிந்திருந்தாலும், பாரியளவில் காணக்கூடிய நிறுவமாக இருந்து வருகிறது. இந்த நிறுவனம் பிரித்தானியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும், பொருளாதார குடியேற்றவாசிகளுக்கு குறைந்த விலையில் சர்வதேச அழைப்புகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகளை வழங்கி வருகிறது.
-
லண்டன் ‘மெடேம் துஷாட்ஸ்’டில் மோடிக்கு மெழுகுச் சிலை
லண்டன்: லண்டனிலுள்ள புகழ்பெற்ற மெடேம் துஷாட்ஸ் மெழுகு உருவச்சிலை அருங்காட்சியகத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை உருவாக்க பல மாதங்கள் ஆனது. வணக்கம் கூறுவது போல நிற்கும் இந்தச் சிலையிலும் அவர் வழக்கமாக அணியும் குர்தாவும் உள்ளது.
-
இந்தியா: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுத் தீர்ப்பு
சென்னை: இந்தியாவில் நாடு தழுவிய அளவில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை ஒரே நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே நடத்தப்படும் என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.பல மாநில அரசுகளை ஆட்சேபங்களை ஏற்க மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தேர்வுத் தேதிகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
குடலில் உபாதை ஏற்பட்ட இச்சகோதரருக்கு உதவுங்கள்
புதிய காத்தான்குடியைச் சேர்ந்த A.M சஜ்வின் என்ற 16 வயது இளைஞனுக்கு குடலில் கட்டி ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைக் கண்டறிந்த வைத்தியர் இக்கட்டியை நீக்குவதற்கு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபா செலவாகும் எனக் கூறியுள்ளார்.
-
அல்-இக்றா பாலர் பாடசாலை ஆசிரியைகள் சிப்லிக்கு நன்றி தெரிவிப்பு
காங்கேயேனோடை: காங்கேயேனோடை அல்-இக்றா பாலர் பாடசாலையின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் 2016.04.27ஆந்திகதி புதன்கிழமை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாறுக் விஜயமொன்றினை மேற்கொண்டார்.
-
வாலிபர்களுக்கான இரண்டு வருடகால ஷரீஆ கற்கைநெறி
சமகாலத்தில் அல் குர்ஆனுடைய பணியில் தன்னை ஈடுபடுத்தி வரும் புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் இயங்கி வரும் அல்பத்ர் இஸ்லாமிய நிறுவனம் தனது மற்றுமொரு பணியாக எமது வாலிபர்களின் மார்க்கக் கல்வியின் அவசியத்தை கருத்தில் கொண்டு இரண்டு வருடகால ஷரீஆ கற்கைநெறியை ஆரம்பிக்கவுள்ளது.
-
பேஷ் புக்கின் பின்பக்கம்
ஐடியாவை விட ஐடியே நோக்கப்படும் ஆக்கத்துக்கு லைக் இட. கொமன்ட்ஸ்களுடன் குறுகிப் போனது மரணத் துயர்.
-
ஏறாவூரில் சமுதாய விழிப்புணர்வு மாநாடு
சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர் ஏறாவூர்: உமர் கத்தாப் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தலை சிறந்த மார்க்க உலமாக்கள் கலந்து கொள்ளும் சமுதாய விழிப்புணர்வு மாநாடு நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (29) ஏறாவூர் மிச் நகர் ஆயிஷா பள்ளிவாசலுக்கு அருகாமையில், மாலை 4.30 முதல் இரவு 10.00 மணிவரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அதிகாரப் பகிர்வும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும்
புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர்.அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.