கொழும்பு: சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கின்ற ஆயுதங்களை கையளிப்பதற்காக அரசாங்கம் வழங்கியுள்ள பொதுமன்னிப்பு காலம் இன்று (25) முதல் ஆரம்பமாகின்றது.அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை, அனுமதிப்பத்திரமின்றி தம்மிடமுள்ள சட்டவிரோத ஆயுதங்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில், ஆயுதங்களை கையளிப்போருக்கு, பணப் பரிசும் வழங்குவதற்கும் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.அந்த வகையில், துப்பாக்கி, கைத்துப்பாக்கி, ரி56 வகை துப்பாக்கிகளை கையளிப்போருக்கு, ரூபா 5,000 தொடக்கம் ரூபா 25,000 வரையான சன்மானம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத மற்றும் பல்வேறு குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலேயே, பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Published by


Leave a comment