Category: Your Kattankudy
-
அக்கரைப்பற்று இஸ்லாமிய எழுச்சி மாநாடு: பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கரைப்பற்று: இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு நேற்று (07) சனிக்கிழமை அக்கரைப்பற்று பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது. ‘சுவனம் நோக்கிய பயணம்’ என்ற தொனிப்பொருளில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெற்ற இம்மநாட்டில், பிரபல உலமாக்களான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி, அஷ்ஷெய்க் முர்ஸித் அப்பாஸி, அஷ்ஷெய்க் ஜாபிர் ஷரபி, அஷ்ஷெய்க் நியாஸ் ஸிராஜி, அஷ்ஷெய்க் அன்ஸார் தப்லீகி, அஷ்ஷெய்க் அப்துல்…
-
காத்தான்குடி பிரதான வீதியில் விபத்துக்களை குறைப்பதற்கு பூச்சாடிகளை அகற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுமதி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காத்தான்குடி பிரதான வீதியில் நடுவே சில இடங்களில் காணப்படும் பூச்சாடிகளினால் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்பாக இருப்பதாக அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
-
சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– எம்.ரி.எம். யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடியில் பல்வேறு வகையான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூகப்பணிகளை மேற்கொண்ட அமைப்பின் அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 08.05.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
-
பிரித்தானியாவில் அதி வெப்பமான நாளாக சனிக்கிழமை பதிவாகியது
லண்டன்: பிரத்தானியாவில் இதுவரை இந்த ஆண்டில் நிலவிய மிக வெப்பமான நாளாக கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது, வார கடைசி நாளான சனிக்கிழமை 26 C வெப்பம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பிரித்தானியாவில் நிலவிய மிக வெப்பமான நாளாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.ஆனால், சனிக்கிழமை நிலவிய வெப்பத்தை விட ஞாயிற்றிக்கிழமை வெப்பம் இன்னும் 30 C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மனித உடலிற்கு தீங்கை ஏற்படுத்தும் சீன இறக்குமதி மீன்கள் சந்தைகளில் விற்பனை
கொழும்பு: மனித உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு-சிலாபம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனரல் பண்டார குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வகையான மீன்களில் ஈயம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
-
விமானத்தில் போகும்போது கணக்குப் போடாதீங்க
நியுயோர்க்: விமானம் ஒன்றில் கணித சமன்பாடு ஒன்றை ஆராய்ந்துகொண்டிருந்த பேராசரியரை தீவிரவாதி எனக் கருதி சூசகத் தகவல் ஒன்றை வெளியிட்ட சக பயணியால் அந்தப் பேராசிரியர் பெரும் தர்மசங்கடத்துக்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விமானப் பயணத்தின் போது கணித சமன்பாடு ஒன்றை தீர்த்துக் கொண்டிருந்த இத்தாலியப் பொருளியல் பேராசிரியரை தீவிரவாதி எனக் கருதி, அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இரகசியமாக வெளியிட்ட தகவலை அடுத்து அவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
-
‘பேறுவளைக்கு ஓர் நளீம் ஹாஜியாரை போன்று காத்தான்குடிக்கு ஓர் ஷிப்லி பாரூக்’
– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் பேறுவளையில் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து எழிமையான வாழ்க்கையினை ஆரம்பித்த உலகம் போற்றும் அறிவுத் தந்தை அல்ஹாஜ் நளீம் அவர்கள் 2005 ஆகஸ்ட் மாதம் வபாத்தானார்கள். அல்ஹாஜ் நளீம் ஹாஜியின் மகத்தான பணிகளை நினைவுகூரும் போது கிழக்கிலே பொறியலாளர் ஷிப்லி பாரூக்கின் சமூக சேவைகளும் நளீம் ஹாஜியாரின் சேவைகளை போலிருப்பது மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விடயமாக இருப்பதனை நான் உணர்கின்றேன்.
-
இங்கிலாந்தைச் சமாளிக்க மெத்யூசுக்கு உதவ இருக்கும் சங்கா, மஹேல
லண்டன்: இங்கிலாந்தில் சங்கக்காரா, ஜெயவர்த்தனேவின் ஆலோசனைகள் இலங்கை அணிக்கு பெரிதும் உதவியாக இருக்கப் போவதாக அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார்.இலங்கை அணியின் இரு தூண்களாக இருந்த சங்கக்காரா, ஜெயவர்த்தனே இருவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இதன் பிறகு அணி தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது.
-
240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினம்
லண்டன்: முதலையைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட கடல்வாழ் விலங்கினம் ஒன்று சுமார் 240 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். புதிதாக கிடைக்கபெற்ற புதைபடிவத்திலிருந்து முற்றாக தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த மிகப்பழமையான கடல்வாழ் விலங்கினம் என ஸ்காட்லாந்திலுள்ள அறிவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஐரோப்பிய நாடுகளின் தலைநகர் ஒன்றில் முதன் முதலாக தேர்வுசெய்யப்பட்ட முஸ்லிம் மேயர் சாதிக் கான்
லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக் கான் தேர்வாகியிருக்கிறார். லண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் ஐந்தாம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சத வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித் 43.2 சதவீத வாக்குகள் பெற்றார்.
-
சவுதி அரேபியாவின் எண்ணெய்வள அமைச்சர் பதவி நீக்கம்
றியாத்: சவுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் வள அமைச்சராக இருந்த அலி அல்-நய்மி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.பரந்துபட்ட அளவில் மன்னரால் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க சீர்திருத்ததின் ஒரு பகுதியாக அவரது பதவி நீக்கமும் இடம்பெற்றுள்ளது. அவருக்கு பதிலாக சுகாதார அமைச்சராக இருந்த காலிதி அல்-ஃபாலி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்த்துறை என்ற புதிய அமைச்சுக்கு அவர் தலைமை வகிப்பார்.