Category: Your Kattankudy
-
இலங்கையிலுள்ள இஸ்லாமிய அறபுக்கல்லூரிகளில் பொதுவான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துக
கொழும்பு: இலங்கையில் இயங்கி வருகின்ற அனைத்து இஸ்லாமிய அறபுக் கல்லூரிகளிலும் பொதுவானதொரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீமிடம் கோரிக்கை முன்வைத்தார். அத்துடன், பாடத்திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட அது தொடர்பிலான செலவீனங்களை ஸ்ரீலங்கா ஹிரா பெண்டேஷன் ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி வழங்கினார்.
-
நுண் நிதியளிப்பு திட்டத்தில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்துக!
கொழும்பு: நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்பிக்கப்பட்ட நுண் நிதியளிப்பு சட்ட மூலத்தை வரவேற்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நுண்நிதியளிப்பு சட்டத்திலுள்ள நன்மைகளை முஸ்லிம்களும் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி அதில் மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ள இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைத்தார்.
-
நினைவாற்றல் விருத்தியும் மூளை அபிவிருத்தியும் செயலமர்வு
எம்.ரி.எம்.யூனுஸ் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் கீழ் இயங்கும் இஸ்லாமிய முன்மாதிரி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கான “நினைவாற்றல் விருத்தியும் மூளை அபிவிருத்தியும்” தொடர்பான செயலமர்வு இன்று 04.05.2016 புதன்கிழமை காத்தான்குடி தாறுல் அர்கம் வளாகத்தில் இடம்பெற்றது.
-
குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலை மைதானம் புனர் நிர்மாணம்
எம்.என்.எம். பர்வீஸ் குருநாகல்: அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் டொக்டர் ஷாபி ஷிஹாப்தீனின் ஆலோசணைக்கிணங்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் பதில் தலைவர் எம் என் நஸீர் அவர்களின் முயற்சியின் பலனாக விளையாட்டுத்துறை அமைச்சினால் குருநாகல் கெகுனுகொல்ல தேசிய பாடசாலை மைதானத்தை புணர் நிர்மாணம் செய்வதற்கு ரூபா 30,24,792.37 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற கலகம் தொடர்பில் அறிக்கை
கொழும்பு: நேற்று (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பிலான அறிக்கை இன்று (04) பிற்பகல் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. குறித்த அறிக்கை, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவால் தயாரிக்கப்பட்டு சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
-
பாடசாலைகளை 12 மணிக்கு மூடுவதால் பாதிப்பே
கொழும்பு: நாட்டில் நிலவுகின்ற அதிக உஷ்ணமான காலநிலை காரணமாக வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண அரச பாடசாலைகள் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு மாகாண கல்வியமைச்சுக்களால் தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.பாடசாலை மாணவர்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு சிரமங்களினை கருத்திற்கொண்டே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
-
இலவச உம்றா திட்டத்தின் 2ஆவது குழு இன்று பயணம்
கொழும்பு: நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீதமுள்ள மேலும் 300 உம்றா யாத்திரிகள் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ள நோன்புக்கு முன்னர் உம்றாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
-
கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைப்பு
கொழும்பு: விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவின் கீழ் செயற்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கமைய இது இடம்பெற்றுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
-
மார்பகப்புற்றுநோயைத் தடுக்கும் வழி கிடைத்து விட்டதா?
லண்டன்: மார்பக புற்றுநோயைத்தோற்றுவிக்கும் மரபணு மாற்றங்கள் குறித்து மிகத்துல்லியமான தகவல்களை தாங்கள் கண்டறிந்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். நேச்சர் என்னும் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள ஆய்வின் முடிவுகள் புற்றுநோய் ஆய்வில் முக்கிய மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த நோய்க்கான புதிய சிகிச்சை வழிகளையும் இந்த நோயே வராமல் தடுப்பதற்கான சாத்தியங்களையும் இது உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
-
UNP-NFGG முயற்சியினால் கர்பலா வீதிப்புனரமைப்பு நிறைவடைகிறது
NFGG ஊடகப்பிரிவு, ஓட்டமாவடி அகமட் இர்ஷாட் பாலமுனை: UNP –NFGG யின் கூட்டிணைந்த முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலமுனை கர்பலா வீதி செப்பனிடப்படும் வேலைகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதனை NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று (02.05.2016) நேரில் சென்று பார்வையிட்டார். பொறியியலாளர் அப்துர் ரஹ்மானோடு UNPயின் காத்தான்குடி கொத்தணி அமைப்பாளர் HMM முஸ்தபா அவர்களும் இதில் கலந்து கொண்டார்.