அக்கரைப்பற்று இஸ்லாமிய எழுச்சி மாநாடு: பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ansar thableeghi– பழுலுல்லாஹ் பர்ஹான்

அக்கரைப்பற்று: இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு  நேற்று (07) சனிக்கிழமை அக்கரைப்பற்று பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது. ‘சுவனம் நோக்கிய பயணம்’ என்ற தொனிப்பொருளில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெற்ற இம்மநாட்டில், பிரபல உலமாக்களான அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் ஷரயி, அஷ்ஷெய்க் முர்ஸித் அப்பாஸி, அஷ்ஷெய்க் ஜாபிர் ஷரபி, அஷ்ஷெய்க் நியாஸ் ஸிராஜி, அஷ்ஷெய்க் அன்ஸார் தப்லீகி, அஷ்ஷெய்க் அப்துல் கனி ஹாமி, அஷ்ஷெய்க் சாபித் ஷரயி, அஷ்ஷெய்க் அன்சார் மக்கி, அஷ்ஷெய்க் ஹாதில் ஹக் அப்பாஸி, அஷ்ஷெய்க் அர்ஹம் இஹ்சானி, அஷ்ஷெய்க் ஆஸிக் ஸலபி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

 மேற்படி மாநாட்டில் அம்பாறை,அக்கரைப்பற்று,பொத்துவில்,சம்மாந்துறை,கல்முனை, மருதமுனை,மட்டக்களப்பு,காத்தான்குடி,ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்,பெண்கள் என சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 ansar thableeghi

குறித்த மாநாட்டில் சுவனம் நோக்கிய பயணம்,சுன்னாவைப் புரிந்து கொள்வது எப்படி?,அபூர்வ சக்தியா? ஏமாற்று வித்தையா?,இஸ்லாத்திற்கெதிரான பகுத்தறிவு வாதம்,நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இஸ்லாமிய வாரிசுரிமை,மறுமையின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்,சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற முக்கிய தலைப்புக்களில் உரைகள் நிகழ்த்தப்பட்டு சந்தேகங்களுக்கான தீர்வுககளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s