லண்டன்: பிரத்தானியாவில் இதுவரை இந்த ஆண்டில் நிலவிய மிக வெப்பமான நாளாக கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது, வார கடைசி நாளான சனிக்கிழமை 26 C வெப்பம் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பிரித்தானியாவில் நிலவிய மிக வெப்பமான நாளாக இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.ஆனால், சனிக்கிழமை நிலவிய வெப்பத்தை விட ஞாயிற்றிக்கிழமை வெப்பம் இன்னும் 30 C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவும் வெப்பமே நாட்டில் மிக வெப்பமான நாளாக பதிவாகும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.இன்று ஞாயிற்றுக்கிழமையும் வெப்பமான நாளாகவே அங்கு இருந்துவருகிறது. நாட்டின் பெரும் பகுதியில் வானம் தெளிவாக இருக்கும் இதனால் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கதிர்வீச்சிகளின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் வெளியே செல்லும்மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு இல்லாமல் செல்பவர்களின் உடம்பில் தீ காயம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக எனவும் தெரிவிக்கப்படுகிறது. பகல் 11 மணி முதல்3 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமால் நிழலான இடத்தில் இருக்கும் மாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியத் தலைநகர் லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 26C வெப்பநிலை பதிவாகிறது.
Published by


Leave a comment