“மீராவோடையில் மாற்றத்தை நோக்கிய பயணம் உருவாக்கப்பட வேண்டும்”- யூத் ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் பதுர்டீன்

  • ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

youth star meeravodaiமீராவோடை: ஓட்டமாவடி மீராவோடை பிரதேசத்தில் விளையாட்டினை மட்டும் குறிக்கோளாக வைத்து தனது முன்னெடுப்புக்களை மட்டுப்படுத்தாமல் சமூக சேவையினையும், பிரதேசத்தின் ஒற்றுமையினையும் முக்கிய நோக்கமாக கொண்டு பத்து வருடங்களுக்கும் மேலாக மீராவோடை பிரதேசத்தில் இயங்கி வருக்கின்ற கழகமாக யூத்-ஸ்டார் கழகம் இருந்து வருகின்றது. குறித்த கழகமானது அதிகளவிலான உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகின்ற விளையாட்டு கழகமாக மீராவோடை பிரதேசத்தில் இருப்பதன் காரணமாக பிரதேசத்தில் பிரதான ஜும்மா பள்ளிவாயலாக இருக்கின்ற மீரா ஜும்மா பள்ளிவாயலின் புதிய நம்பிக்கையாளர் தெரிவினை உடனடியாக நடாத்தி முடிக்குமாறு வேண்டி நிற்கின்றது.

மேலும் தகுதியான அரசியல் பக்க சார்பற்ற புதிய தலை முறையானது தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தும் கழகத்தின் முக்கிய நோகமாகவும் இருந்து வருக்கின்றது. இதனை மையமாக வைத்தும், மீராவோடை சமூகத்தின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டும் மீராவோடையில் மாற்றத்தை நோக்கிய பயணம் எனும் தொனி பொருளில் யூத்-ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் பதுர்டீனின் தலைமையில் இராப்போசன விருந்துபசாரத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று கூடல் மீராவோடை புளியடித் துறை வெளி திடலில் கழக உறுப்பினர்கள் சகிதம்  22.05.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்றது.

இந்த ஒன்று கூடல் வைபவத்தில் மிக முக்கிய விடயமாக முன்னாள் சாட்டோ விழையாட்டு கழகத்தின் தலைவர் வை.எல்.மன்சூரினாலும் ஜனாப் முனவர் என்பவரினாலும் இணைந்து 30000 ரூபாய்கள் பெறுமதியான கிறிக்கட் விளையாட்டு சீருடைகள் யூத்- ஸ்டார் விளையாட்டுக்கழகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு மாதத்திற்குள் 60000 ரூபாய்கள் பெறுமதியான கடின பந்து விளையாடுவதற்கான மெட்டுனும் வழங்கி வைக்கப்படும் என்ற உறுதி மொழியும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஹக்கீம், கழகத்தின் உப தலைவர் என்.எம்.நவாஸ் ஆசிரியர், உட்பட கழக உறுப்பினர்கள் சகிதம் பெருமளவிலான பிரதேச மக்களும் கலந்து கொண்டதினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இங்கு உரையாற்றிய கழகத்தின் தலைவர் பதுர்டீன் மற்றும் சாட்டோ விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர் வை.எல் மன்சூர் ஆகியோர் மீராவோடை பிராந்தியத்தில் இருக்கின்ற விவசாய, மீனவ சமூகம் சார்ந்த காணி, மீள் குடியேற்றம், இழக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை மீள் இணைப்பதற்கான முயற்சிகள், மீனவ சமூகத்தை நவீன தொழில் நுட்பத்துடன் முன்னேற்றுவதற்கான முயற்சிகள் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளையும் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இரண்டு தடவைகள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளாராக இருந்து பணியாற்றிய மீராவோடையை சேர்ந்த கே.பி.எஸ். ஹமீட் என்பவர் எந்த காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என மேற்குறிப்பிட்ட நபர்களால் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் அன்றும் இன்றும் இழக்கப்பட்ட ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குள்தான் அமைந்துள்ளன. இருந்தும் ஒரு உப்புக் கல் அளவு அபிவிருத்திதானும் அப்பிரதேசங்களில் செய்யப்பட்டவில்லை என்பதினால் மீராவோடை மக்கள் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

youth star meeravodai

அத்தோடு பல வருடங்களாக ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்தவரே மீராவோடை ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகவும் இருந்து வருவதினால் சமூகத்தின் பிரச்சனையாக மேலே சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சனைகளுக்கு கடுகளவேனும் எந்த நடவடிக்கையினையும் பிரதேச சபையின் தவிசாளர் என்ற ரீதியில் எடுக்க தவறியுள்ளார். அதன் காரணமாக அரசியல் கலாச்சாரமற்ற, சுதந்திரமான இஸ்லாமிய வரையறைக்குள்ளும், பண்பாட்டுக்குள்ளும் உட்பட்ட ஒரு நம்பிக்கையாளர் சபையுனையும் அதனோடு சேர்த்து புதிய நம்பிக்கையாளர் சபையின் தலைமையினையும் உடனடியாக மீராவோடை பிரதேச மக்கள் ஏற்படுத்த முனைய வேண்டும் என வழியுறுத்தப்பட்டது. அத்தோடு சுயதீனமானதும் சுதந்திரமானதுமான புதிய நம்பிக்கையாளர் சபை ஒன்று மீராவோடை ஜும்மா பள்ளிவாயலில் ஏற்படுத்தபடுவதற்கு யூத் ஸ்ட்டார் விளையாட்டு கழகமானது சமூக சேவை செய்யும் கழகம் என்ற ரீதியில் தன்னாலான அத்தனை முயற்சிகளை எடுக்க தவறாது என தனதுரையில் கழகத்தின் தலைவர் பதுர்டீன் சுட்டிக்காட்டி இளைஞர்களுக்கு தெளிவு படுத்தினார். மேலும் அங்கு சமூகமளித்திருந்தவர்களின் கருத்து பரிமாற்றங்களின் படி புதிய மீரா ஜும்மா பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபையின் தலைமை பதவிக்கு யூத்-ஸ்டார் விளையாட்டு கழக்கத்தின் தலைவர் பதுர்டீனே பொருத்தமானர் என்ற கருத்துக்களும் பரிமாறப்பட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s