ஊர் வீதி அபிவிருத்தி

  • எம்.எச்.எம் அன்வர்

old road hiluriyyaகாத்தான்குடி: காத்தான்குடி பழைய கல்முனை வீதி விஸ்தரிப்பிற்காக மக்கள் தங்களின் மதில்கள் மற்றும் வீட்டுச் சுவர்கள உடைத்து ஒத்துழைப்பு வழங்குவதைக் காணமுடிகின்றது. நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் மிக மோசமாக காணப்பட்ட இவ்வீதியானது இதற்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்கள் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது வீதியின் நடுப்பகுதி விஸ்தரிப்பிற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி வீதியானது இருபக்கமும் வடிகான்கள் இடப்பட்டு கார்பட் வீதியாக போடப்படவுள்ளதுடன் அண்மையில் இவ்வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக புணர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

old road hiluriyya

old road hulfa

Published by

Leave a comment