Category: Your Kattankudy
-
கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்- ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ,மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஸாஹிறா விஸேட பாடசாலை மைதானத்தில் கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். பஷீர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.
-
எமது இணைய தளத்தில் காத்தான்குடி அபிமான் ஆசிரியரின் இலவச ஆங்கில வகுப்பு மிக விரைவில்
காத்தான்குடி: காத்தான்குடியின் பிரபல ஆங்கில ஆசான் எம். அமீர் அலி (அபிமான்) ஆசிரியரின் இணையத்தளம் மூலமான இலகு வழியில் ஆங்கிலம் கற்றல் தொடா்பான பாட நெறி ஒன்றினை உள்ளுா், மற்றும் கடல் கடந்து வாழும் மாணவா்கள் மற்றும் ஏனையவா்களின் நலன் கருதி தான் மிக விரைவில் yourkattankudy website ஊடாக கற்பிக்க உள்ளதாக மேற்படி ஆசிரியா் எம். அமீர் அலி தெரிவித்தார்.
-
இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கு இடையில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 3.1 கோல் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தினால் வருடா வருடம் மாவட்டம் ரீதியாக இடம்பெற்றுவரும் over-40 எனும் கால்ப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் -அம்பாறை மாவட்டத்திற்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத்தொகுதியில் இடம்பெற்றது.
-
முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பு
முல்லையிலிருந்து இர்ஷாட் ரஹ்மதுல்லா… முல்லைத்தீவு மாவட்ட தமிழ், முஸ்லிம் நல்லுறவிற்கான அமைப்பு இன்று காலை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட அறிக்கை இங்கு இணைக்கப்பட்டிருக்கின்றது.
-
– காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013/14 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகாக் குழு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் 2013/14 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாகாக் குழுத்தெரிவு இடம்பெற்றது. பின்வரும் புதிய நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
-
5ம் ஆண்டு புலமைப் பரிசில் மாணவர்களுக்கு ‘புலமை வழி ‘ இலவச வினாவிடை நூற்கள் முபீதாஸ் நிறுவனத்தினால் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அணுசரணையுடன் முபீதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு ‘புலமைப் பரிசில்’ இலவச வினாவிடை நூல் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்து முல்லைத்தீவில் தமிழ், முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
– முல்லையிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும், இப்பிரதேசத்தில் இனக்கலவரமொன்றுக்கு துபமிடும் வகையில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தும், இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கக் கோறும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று (2013.-04-08) முல்லைத்தீவில் இடம் பெற்றது.
-
மட்டு-செங்கலடி நகரில் சிப்றா பென்சி கோணர் வர்த்தக நிலைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவி வெட்டி கொலை-பொலிசார் விசாரணை
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுளை வீதி செங்கலடி பிரதேசத்திலுள்ள ஒரு வீட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் கணவன், மனைவி இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
யார் இவர்கள்…?
– AF47 கொழும்பு: கடந்த சில வாரங்களாக மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் உறவை சீர்குழைக்கும் வகையில், துவேசத்தனமான வார்த்தைகளைப் பிரயோகித்து முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக தமிழ் மக்களை திசைதிருப்பும் அநாமோதய துண்டுப்பிரசுரங்களை தபால் மூலமாக சில விசமிகள் அனுப்பி வருகின்றனர்.
-
மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டடத் தொகுதி திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான மசூர் மௌலானா விளையாட்டரங்கின் பார்வையாளர் அரங்கு, விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வு அறை மற்றும் காரியாலயம் என்பவற்றிற்கான கட்டடத் தொகுதி
-
‘ நிகழ் காலம் ‘ காலாண்டு சஞ்சிகை வெளியீடு
பஹ்மி யூஸூப் கிண்ணியா: திருகோணமலை கிண்ணியா அஷ்ஷெய்ஹ் நாஸிக் மஜீத் (நளீமி)யை பிரதம ஆசிரியராகக் கொண்டுவெளிவரும் ‘ நிகழ் காலம் ‘ காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 07.04.2013 ஞாயிற்றுக்கிழமைகாலை கிண்ணியா பொது நூலக கோட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை விடுக்கின்ற பாராட்டுச் செய்தி
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு (OSA) காத்தான்குடியில் கல்வியலாளர்கள் நிறைந்த மண் என்ற விரிந்த வரலாற்றுப் பதிவை எட்ட வேண்டும் என்ற கனவுடன் கல்விக்கான பல ஊக்குவிப்புத் திட்டங்களை