காத்தான்குடி: காத்தான்குடியின் பிரபல ஆங்கில ஆசான் எம். அமீர் அலி (அபிமான்) ஆசிரியரின் இணையத்தளம் மூலமான இலகு வழியில் ஆங்கிலம் கற்றல் தொடா்பான பாட நெறி ஒன்றினை உள்ளுா், மற்றும் கடல் கடந்து வாழும் மாணவா்கள் மற்றும் ஏனையவா்களின் நலன் கருதி தான் மிக விரைவில் yourkattankudy website ஊடாக கற்பிக்க உள்ளதாக மேற்படி ஆசிரியா் எம். அமீர் அலி தெரிவித்தார்.
மேலும் அவா் தெரிவிக்கையில் உள்ளுா், மற்றும் கடல் கடந்து வாழும் ( பல்கலை கழக ) மாணவா்கள், உயா் தொழில் புரிபவா்கள் என பலரின் அன்பான வேண்டு கோளின் பேரினிலேயே தான் இந்த முயற்சியினை மேற் கொள்ள உள்ளதாக அவர் எம்மிடம் தெரிவித்தார்.
இவ்வாறான பயனுள்ள விடயத்திற்கு ஊடாக அனுசரனை வழங்க முன் வந்த yourkattankudy பணிப்பாளர் சபைக்கு அவா் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
Leave a comment