
– பழுளுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் அணுசரணையுடன் முபீதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவ மாணவிகளுக்கு ‘புலமைப் பரிசில்’ இலவச வினாவிடை நூல் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.அஹமட் லெப்பை, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் உட்பட கல்விமான்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு ‘புலமை வழி ‘ இலவச வினாவிடை நூற்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment