கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்- ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ,மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பும்

– பழுலுல்லாஹ் பர்ஹான்

???????????????????????????????
BY: FM. Farhan

காத்தான்குடி: கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஸாஹிறா விஸேட பாடசாலை மாணவ, மாணவிகளின் 2013 வருடாந்த விளையாட்டு விழாவும் பரிசளிப்பு வைபவமும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஸாஹிறா விஸேட பாடசாலை மைதானத்தில் கிழக்கிழங்கை விஸேட தேவையுடையோர் நலன்புரி அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். பஷீர் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு விஷேட திறனுடைய மாணவர்களின் 30 மீற்றர் ஓட்டம், 50மீற்றர் ஓட்டம், மா ஊதி மிட்டாய் எடுத்தல், ஆண்கள் பெண்களுக்கான நீளம் பாய்தல், உயரம் பாய்தல், முட்டி உடைத்தல், போத்தலினுல் கயிறு போடுதல், குழாயினுள் மாபிள் போடுதல், குண்டெறிதல்,ப ந்து போடுதல், தட்டெறிதல், யானைக்கு கண் வைத்தல், காலினுள் பந்து கொண்டு செல்லல், அணி நடை, தேகப் பயிற்சி போன்ற பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்த கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் மற்றும் கௌரவ அதிதிகளான மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபைகளின் தலைவர் மௌலவி  எஸ்.எம். அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவரும் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளருமான மௌலவி எம்.எச்.எம். புகாரி (பலாஹி), காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்எம்.எம்.சுபைர், கா-குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி எஸ்.சிவநாயகம்  மற்றும் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளினால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஸாஹிறா விஸேட பாடசாலை முகாமையாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில், ஸாஹிறா விஸேட பாடசாலை அதிபர் ஏ.அன்வர் சாதிக், காத்தான்குடி வர்த்தக சங்கத் தலைவர் பி.ரி.எம். பாரூக் ஜேபி, காத்தான்குடி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பஷீர் மதனி, அல்-ஹஸனாத் வித்தியாலய ஆசிரியர் ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), புதிய காத்தான்குடி பெரிய ஜூம்மா பள்ளிவாயல் பேஷ் இமாம் எம்.எம்.ஆதம் லெப்பை (பலாஹி), கூட்டுறவு பரிசோதகர் எம்.ஐ.எம். உசனார் மற்றும் கூட்டுறவு உத்தியோகத்தர் கலீலுல் றஹ்மான்  உட்பட உலமாக்கள் , ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment