இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டங்களுக்கு இடையில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியில் 3.1 கோல் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி

– பழுலுல்லாஹ் பர்ஹான்

1காத்தான்குடி: இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தினால் வருடா வருடம் மாவட்டம் ரீதியாக இடம்பெற்றுவரும் over-40 எனும் கால்ப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் -அம்பாறை மாவட்டத்திற்கும் இடையில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத்தொகுதியில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அணியைவிட 3.1 கோள் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்று ஏதிவரும் 22 திகதி மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் கொழும்பு மாவட்ட அணியுடன் விளையாடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட அணி தகுதிபெற்றுள்ளது.

இரண்டு அணியிலும் மட்டக்களப்பு, காத்தான்குடி, மட்டக்களப்பு, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய விளையாட்டு கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 தமிழ்-முஸ்லிம் விளையாட்டு வீரர்களும்  அம்பாறை, கல்முனை,  மருதமுனை, சாய்ந்தமருது,ச ம்மாந்துறை, காரைதீவு ஆகிய விளையாட்டு கழகங்களிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 தமிழ்-சிங்கள,முஸ்லிம் விளையாட்டு வீரர்களும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

DSC00006

குறித்த போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரா்களான டீன் பைரூஸ், சரீப்டின், ஸாஹிர், பாயிஸ் ஆகியோர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.1

DSC00026DSC00030

Published by

Leave a comment