Category: Your Kattankudy
-
புதிய காதி நீதிபதியாக மௌலவி அலியார் பலாஹி நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் பிரதேசங்களுக்கான புதிய காதி நீதிபதியாக காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற பதினோறாவது தௌறாஹ் நிகழ்வு காத்தான்குடியில்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இவ்வருடமும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
‘பத்ர் யுத்தமும் படிப்பினை பெற வேண்டிய நாமும்’ ரமளான் விஷேட பயான் உரையின் ஒலிப்பதிவு பாகம்-1,2
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஜாமியுத் தௌஹீத் ஜூம்மாப் பள்ளிவாயலில் இஸ்லாத்தின் முதல் வெற்றி ‘பத்ர் யுத்தமும் படிப்பினை பெற வேண்டிய நாமும்’ எனும் தலைப்பில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற விஷேட பயான் உரையின் ஒலிப்பதிவு பாகம்-1,2 எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்..?
கொழும்பு: வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக முஸ்லிம் ஒருவர் போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முஸ்லிம் புத்திஜீவிகள் குழுவினருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
-
மதர் ஸ்ரீ லங்கா’ அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை சிறுவர்கள் குழு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் சிறுவர் விடுதிக்கு விஜயம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் ஒரு நீண்ட கால கருத்திட்டமாக 2008 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘மதர் ஸ்ரீலங்கா’ அமைப்பு சிறுவர்களிடையே ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை தற்போது கிழக்கு மாகாணத்தில்; பல பகுதிகளில் மேற் கொண்டுவருகின்றது.
-
துபாயில் இடம்பெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்ச்சி
– ACM. சப்றி துபாய்: துபாயில் இடம்பெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழும் கொழும்பு சாஹிரா பழைய மாணவர்கள் முதன்முறையாக இப்தார் நிகழ்ச்சி ஒன்றினை கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் ஏற்பாடு செய்து இருந்தனர் . துபாயில் உள்ள இலங்கைப் பிரதி தூதுவராலயத்தின் கொன்சலர் ஜெனரல் எம் . எம் அப்துல் றஹீம் மற்றும் துபாய் வாழ் இலங்கை முஸ்லிம் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர் .
-
ஸ்பெய்ன் ரயில் விபத்து: 80 க்கும் அதிகமானோர் பலி!
மெட்ரிட்: ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் இதுவரைக்கும் 80 பேர்கள்வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். மெட்ரிட் நகரத்துக்கும் பெர்ரோல் நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த ரயில்சந்தியானோ த கொம்போஸ்தலா நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்திலிருந்து வழுவியது. விபத்துக்குள்ளான நேரத்தில் குறித்த ரயிலில் 220 பேர் இருந்தனர்.
-
‘சலாஹூதீன் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பீடாகும்’ – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்
– முகம்மட் சஜி காத்தான்குடி: கண்டி மௌலானா என அழைக்கப்படும் அல்ஹாஜ் எச். சலாஹூதீன் ஹஸ்ரத் அவர்களின் மறைவுக்கு, பொருளாதார பிரதியமைச்சர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ள அனுதாப துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் , நல்லாட்சிக்காக மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணி சந்திப்பு
– PMGG ஊடகப் பிரிவு கொழும்பு: 2013 ஜூலை 24ஆம் திகதி புதன் கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான அரசியல் கூட்டணிக்குமிடையில் வடமாகாணத் தேர்தல் சம்பந்தமான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி சன்றைஸ் வி.கழகத்தின் இப்தார் நிகழ்வு காத்தநகர் கடற்கரையில்…..
-நமது நிருபர்- காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபையினால் வழமை போன்று இவ்வருடமும் புனித இப்தார் ஏற்பாடு காத்தான்குடி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் யாவும் மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
-
பல்கலைக்கழகத்தில் ஓர் பாடமாக சேர்க்கப்பட்ட அல்கொய்தாவின் கவிதை ஒன்று …
– OIT கோழிக்கோடு: கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம் அல் ருபைஷ் எழுதிய கவிதை மாணாக்கர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது சர்ச்சை கிளப்பியுள்ளது. அல் கொய்தா உறுப்பினர் இப்ராஹிம் அல் ருபைஷ். அவர் எழுதிய கவிதை கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
-
கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும்: அசாத் சாலி
கொழும்பு: ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்க எடுத்த முயற்சியை பாராட்டுகின்றோம். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியுடன் நாட்டில் திருப்பம் ஏற்படும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.