அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுள்ளலஹி வபறகாதுஹூ
எமது தாருல் ஹதீத் நிறுவணத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற இலங்கையிலுள்ள அரபிக் கலாபீடங்களைச் சேர்ந்த உயர்வகுப்பு மாணவர்களுக்கானதும், உலமாக்களுக்கானதுமான இலவச ஒரு வார கால கற்கை நெறி வழமை போன்று இவ்வருடமும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதில் சஊதி அரேபியாவிலுள்ள பிரபல்யம் வாய்ந்த பல்கழைக்கழகங்களில் கற்பிக்கின்ற பேராசிரியர்கள் கலந்து கொண்டு பாடங்களை நடாத்தவுள்ளதால் இம்முறை இக்கற்கை நெறியை காத்தான்குடியில் நடாத்த தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இன்ஸாஅல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கற்கை நெறியில் அரபிக் கலாபீடங்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுடன் விசேடமாக அரபிக் கலாபீடங்களில் கல்வி பயில்கின்ற பெண் மௌலவிய்யாக்களையும் உள்வாங்குவதற்கு தீர்மாணிக்கப் பட்டுள்ளதால் இக்கருத்தரங்கில் பங்குபெற விரும்புமும் அனைத்து மாணவர்களும் , மௌலவிய்யாக்களும் தங்களது பெயர்களையும் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கத்தையும் 077-2346492 (மௌலவி MACA. நாஸர் ஜமாலி) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிப்பதோடு, தங்கள் வருகையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
குறிப்பு: குறிப்பிட்ட தொகையினரை மாத்திரம் உள்வாங்கப்படவுள்ளதால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுமாறு அன்பாய் வேண்டிக் கொள்கின்றோம்.
جزاكم الله خيرا
இவ்வண்ணம்
நிருவாகம் சார்பாக
மௌலவி MACA.நாஸர் ஜமாலி
077-2346492
Leave a comment