துபாய்: துபாயில் இடம்பெற்ற கொழும்பு சாஹிரா பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வாழும் கொழும்பு சாஹிரா பழைய மாணவர்கள் முதன்முறையாக இப்தார் நிகழ்ச்சி ஒன்றினை கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் ஏற்பாடு செய்து இருந்தனர் . துபாயில் உள்ள இலங்கைப் பிரதி தூதுவராலயத்தின் கொன்சலர் ஜெனரல் எம் . எம் அப்துல் றஹீம் மற்றும் துபாய் வாழ் இலங்கை முஸ்லிம் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர் .
மௌலவி அல் ஹாபிழ் றிகாஸ் அவர்களின் பயானுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் 100 க்கு மேற்பட்டோர் பங்கேற்றதுடன் மஹ்ரிப் தொழுகையிலும் கலந்து கொண்டனர்.
கொழும்பு சாஹிரா துபாய் கிளையின் தலைவர் மொகமட் F. பிராஷ் கல்லூரியின் தேவைகளை எடுத்துரைத்து அதற்காக பழைய மாணவர்களின் பங்களிப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார் . கொன்சலர் ஜெனரல் எம் . எம் அப்துல் றஹீம் தனதுரையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சமகால சவால்களை சந்திப்பதற்கு அனைத்து முஸ்லிம் குழுக்களின் ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தார் . இராப்போசன வைபவத்துடன் இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது .
.





Leave a comment