காத்தான்குடி சன்றைஸ் வி.கழகத்தின் இப்தார் நிகழ்வு காத்தநகர் கடற்கரையில்…..

srsc -நமது நிருபர்-

காத்தான்குடி: காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபையினால் வழமை போன்று இவ்வருடமும் புனித இப்தார் ஏற்பாடு காத்தான்குடி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் யாவும்  மிகவும் சிறப்பாக நடை பெற்றது. சன்றைஸ் வி.கழகத்தின் தலைவா் என்.எம்.ஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கழகத்தின் சிரேஷ்ட, கனிஷ்ட வீரா்கள், என சுமார் 50 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தொடராக இவ்வாரான இப்தார் ஒன்று கூடலை காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை படைத்து வரும் மேற்படி காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் தற்பொது சமய, சமூக செயற்பாடுகளிலும் தனது கழக வீரா்களை ஈடுபடுத்தி வருகின்றதனைக் காணக்கூடியதாக உள்ளது.

DSC00016DSC00017DSC00014DSC00020DSC00007DSC00008 DSC00009DSC00013DSC00018

Published by

Leave a comment