Author: yourkattankudy.com
-
அக்கரைப்பற்றில் நீதி மன்றக் கட்டம் திறப்பு!
அக்கரைப்பற்று: அக்கரைப்பற்று மாவட்ட நீதி மன்றக் கட்டடத் திறப்பு விழா நேற்று (05) மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் கட்டடத்தை திறந்துவைத்தார். பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.
-
ஏன் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்?
– SHM சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபொலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.
-
ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு றிசாத் பதியுதீன் வாழ்த்து!
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
-
துல்லிய வானிலை முன்னறிவிப்பு வழங்க டொக்ளர் ராடார் முறை அறிமுகம்
கொழும்பு: பொது மக்களுக்கும் மீனவர்களுக்கும் துல்லியமாக வானிலை முன்னறிவிப்புகளை வழங்குவதற்காக டொக்ளர் ராடார் முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக, கடந்த காலங்களில் ஏற்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்திக்க முடிவுமென எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
-
பொதுநலவாய மாநாட்டினால் கொழும்பு ஸ்தம்பிதம் அடையாது
கொழும்பு: பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு கடமைகளில் 20 ஆயிரம் பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவற்றில் 5000 போக்குவரத்து பொலிஸாரும் அடங்குவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.
-
அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள துஆக்கள்
– முகமட் சுக்ரி திருக்குர் ஆனில் இம்மையிலும் மறுமைலும் நமக்கு வேண்டிய அனைத்து விசயங்களும் துவாக்களும் உள்ளன. அவற்றை பின்பற்றி நடந்தால் இம்மையிலும் மறுமைலும் வெற்றியாளர்களாக நாம் இருப்போம். திருகுரானில் என்னற்ற துவாக்கள் உள்ளன அவற்றுள் சில..
-
போக்குவரத்துக்கு தடையாக அமைத்திருத்த கொங்ரீட்கற்களை கொண்டு வீதியின் சிறு பகுதியை முழுமையாக நிரப்பி செப்பனிட்ட ஓட்டமாவடி மாஞ்சோலை இளைஞர்கள்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மாஞ்சோலை 207ஏ கிராம சேவைப்பிரிவின் பதுரியா நகர் கிராமத்தில் ஜெய்கா திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுனுளு வீதியின் சிறு பகுதி வடிகான் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருத்தது.
-
விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம்! இந்தியாவின் மற்றுமொரு விண்சாதனை!!
– SHM ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் இன்று ஏவப்பட்டது. இந்த விண்கல முயற்சி வெற்றியா? இல்லையா என்பது 10 மாதங்களுக்குப் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பியது.
-
பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
பண்டாரவளை: பண்டாரவளை, புனாகலை, மாபிடிய பகுதியில் நேற்று மாலை பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து நேற்று மாலை 6.50 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் அடங்குவதாகவும் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஸாவியா மகளீர் கல்லூரியின் சாதணையாளர் கௌரவிப்பு வைபவம்
– முகம்மட் சஜீ காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கோட்டத்தின் ஸாவியா மகளீர் கல்லூரியின் சாதணையாளர் கௌரவிப்பு வைபவம் சமீபத்தில் கல்லூரியின் முதல்வர் நயீமா சலாம் தலைமையில் இடம் பெற்றது. ஸாவியா மகளீர் கல்லூரியின் பிராத்தனை மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் கல்வி மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகளிள் சாதணை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
-
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இந்திய வீடமைப்புத் திட்டத்திற்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்
– பொன்தீவு கண்டல் கிராமத்தில் இருந்து இர்ஷாத் றஹ்மததுல்லா மன்னார்: மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் பொன்தீவு கண்டல் கிராமத்தில் முஸ்லிம்களுக்கென மு்னெடுக்கப்பட்டுவந்த இந்திய வீடமைப்பு திட்டம் பிரதேச செயலாளரினால் தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது தொடர்பில் ஆராயும் வகையில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான மக்கள் பிரதி நிதிகள் குழுவினர் நேற்று மாலை (2013.11.04) அங்கு சென்றனர்.
-
ஒசாமாவை காட்டிக்கொடுத்ததாக சன்மானம் கோரும் அமெரிக்கர்
நியுயோர்க்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடனை காட்டிக்கொடுத்ததாக கூறி அமெரிக்க நாட்டவர் ஒருவர் அதற்கான 25 மில்லியன் டொலர் சன்மானத்தை கோரியுள்ளார். அமெரிக்காவின் மிசிகன் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான டொம் லீ என்பவரே ஒசாமாவின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்ட மேற்படி தொகைக்கு உரிமை கோரியுள்ளார்.