பண்டாரவளை: பண்டாரவளை, புனாகலை, மாபிடிய பகுதியில் நேற்று மாலை பள்ளத்தில் பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து நேற்று மாலை 6.50 அளவில் இந்த விபத்து ஏற்பட்டதென பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்களும் அடங்குவதாகவும் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட18 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 11 பேர் தியத்தலாவ வைத்தியசாலையிலும், 7 பேர் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பூனாகலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது 350 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணைகளிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பண்டாரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.LK
Leave a comment